உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கபடி வீரர் துாக்கிட்டு தற்கொலை

கபடி வீரர் துாக்கிட்டு தற்கொலை

சிக்கமகளூரு, : காதல் மனைவி பிரிந்து சென்றதால், கபடி வீரர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சிக்கமகளூரு ரூரல் தெகுரு கிராமத்தில் வசித்தவர் வினோத், 24. கபடி வீரர். இவரும், தெகுரு கிராமத்தின் தனுஜா, 21 என்பவரும், நான்கு ஆண்டுகளாக காதலித்தனர். காதலுக்கு தனுஜா குடும்பத்தினர், எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இருவரும், வீட்டைவிட்டு ஓடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.மகள் கடத்தப்பட்டதாக தனுஜாவின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். வினோத், தனுஜாவை போலீசார் மீட்டனர். போலீஸ் நிலையத்தில் வைத்து நடந்த பேச்சின் போது, பெற்றோருடன் செல்வதாக தனுஜா தெரிவித்தார். இதனால் அவரை பெற்றோருடன், போலீசார் அனுப்பி வைத்தனர்.ஆனாலும் காதல் மனைவி திரும்பி வந்து விடுவார் என்ற நம்பிக்கையில், வினோத் காத்திருந்தார். ஆனால் தனுஜா திரும்பி வரவே இல்லை. இதனால் மனம் உடைந்த வினோத், கடந்த 2ம் தேதி வீட்டில், துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு, மங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று முன்தினம் இறந்தார். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி