உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1.50 கோடி கலசம் திருட்டு; பக்தர் போல வேடமணிந்து வந்த நபர் கைது

ரூ.1.50 கோடி கலசம் திருட்டு; பக்தர் போல வேடமணிந்து வந்த நபர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் ஜெயின் சமூக நிகழ்ச்சியில் ரூ.1.50 கோடி மதிப்பிலான இரு கலசங்களை திருடிச் சென்ற நபரை உத்தரபிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர். ஜெயின் சமூகத்தினரின் 'தசலட்சண மகாபர்வ்' நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி நடைபெற்றது. 10 நாள் நடக்கும் இந்தத் திருவிழாவின் போது, வைரம் உள்ளிட்ட கற்கள் பதிக்கப்பட்டிருந்த 115 கிராம் எடையுள்ள தங்க கலசமும், 760 கிராம் எடையுள்ள தங்கத் தேங்காயையும் மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.1.50 கோடியாகும். இதனால், அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள், போலீஸில் புகார் அளித்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, பூஷன் வர்மா என்பவன் ஜெயின் சமூகத்தினரைப் போல பாரம்பரிய உடை அணிந்து வந்து இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், பூஷன் வர்மாவை உத்தரபிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். மேலும், அவனிடம் இருந்த கலசத்தையும் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே, இவன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

M Ramachandran
செப் 08, 2025 20:03

ramesh செப் 08, 2025 17:31 திருட்டு பயல்கள் குடி இருப்பது அனைத்தும் பிஜேபி ஆழும் மாநிலங்களில் . இப்படி இருக்க ஸ்டாலின் எங்கே வந்தார் . இது தனி மனிதன் செய்வது. அது கூட அரசை யேற்று நடத்துபவரே கள்ள பண கேஆசில் நீதி பதிக்கே லஞ்சம் கொடுக்கும் தாலியின் ஆட்சி இது வெட்க கேஆடையய் தெரிய வில்லையா? முட்டு கொடுப்பதும் சீர் ஆய்ந்து முட்டு கொடுக்கணும். 200 ரூபாய் ஊபீஸ் மாதிரி எழுத கூடாது இங்கு பல காரியங் சட்டத்திற்கு புறம்பாக செய்து உதாரணம் அண்ணா ப்பலகைய்யகளை விஷயம் தொட்டு கொலை மனித கழிவை குடி தண்ணீரில் கலப்பது அதை காவல் துறை மறைத்து காப்பாற்றுவது உடங்க்களில்சிந்தி சிரிக்கிதே. அதற்கு என்ன உங்க பதில்.. ஒரு முஸ்லீம் பெண்னை மான பாங்கம் படுத்த முயரிசித்தவனை விரைவில் பிடிக்க உ.பி. முதலவர் உத்தரவிட்டு அவனைஅடுத்த நாளென கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனையையும் பெரு கொடுத்துள்ளார்களெ அது உன் கண்ணுக்கு படவில்லையா? இஙகு அது மாதிரி வழக்குகளுக்கு என்ன பதில்? சும்மா 200 ஊபீஸ் மாதிரி கமன்ட் போட வேண்டாம்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 08, 2025 19:25

சமணர் “முற்றும்” துறந்த என்றால் முற்றும் திறந்த துறவி. அவருக்கு வைரம் பதித்த தங்கச் சொம்பு, கலசம் பாவம்.


D.Ambujavalli
செப் 08, 2025 18:30

திருடிச்சென்றவன் உடனடியாக உருக்கி, நாலைந்து இடங்களில் பதுக்கியிருக்கலாமே CCTV உள்ளது என்பதை mun ஆர் கவனித்திருக்க வேண்டாமா? சுத்த அமெச்சூர் போலிருக்கிறது


Thravisham
செப் 08, 2025 17:03

ஒலகத்துல ரொம்ப ஒசந்தது நம்ம சட்டங்களும் மற்றும் அத நடத்தும் நீதிபதிகள் மற்றும்போலீஸ்


V K
செப் 08, 2025 15:35

வாழ்த்துகள் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பிற மாநிலங்களுக்கும் சென்றுள்ளது


karthikeyan
செப் 08, 2025 16:59

அம்பானிக்கும், அத்தனைக்கும் கைக்கூலி இல்லையே...


ramesh
செப் 08, 2025 17:31

திருட்டு பயல்கள் குடி இருப்பது அனைத்தும் பிஜேபி ஆழும் மாநிலங்களில் . இப்படி இருக்க ஸ்டாலின் எங்கே வந்தார் .


V Venkatachalam
செப் 08, 2025 20:22

சபாஷ் சரியாபுடிச்சுட்டீங்க. சூப்பர். அறிவாலய கேட் கீப்பருக்கெல்லாம் சம்மட்டி அடி.


சமீபத்திய செய்தி