உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடைத்தேர்தலில் கல்பனா வெற்றி : ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ?

இடைத்தேர்தலில் கல்பனா வெற்றி : ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்டில் முதல்வராக இருந்த அக்கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் மீது, நில மோசடி மற்றும் சுரங்க மோசடி புகார்கள் எழுந்தன.இந்த விவகாரத்தில், கோடிக்கணக்கான ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவரை அமலாக்கத் துறையினர் கடந்த ஜன., 31ல் கைது செய்தனர். இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன், முதல்வராக பதவியேற்றார், இதற்கிடையே, காண்டே சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., சர்பரஸ் அஹமது, தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கு, கடந்த 20ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இங்கு, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா போட்டியிட்டார். இவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் திலீப் குமார் வர்மா களமிறக்கப்பட்டார். தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கையில், பா.ஜ., வேட்பாளர் முன்னிலை பெற்ற நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் கல்பனா முன்னிலை பெற்றார். முடிவில், 27,149 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ.,வின் திலீப் குமார் வர்மாவை அவர் வீழ்த்தினார். இதையடுத்து, ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரனுக்கு பதிலாக, கல்பனா விரைவில் பதவியேற்பார் என, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Priyan Vadanad
ஜூன் 05, 2024 00:32

கணவர் இருக்குமிடம்தான் மனைவி இருக்கணும்னு உங்களையும் அங்கே கொண்டு சேர்த்துவிட போகிறார்கள். / எச்சரிக்கையாக இருங்கள்./


Priyan Vadanad
ஜூன் 05, 2024 00:29

எங்காவது போயி கொஞ்சம் தியானம் செய்யுங்க./ தியானம் செய்ய போகுமுன் காமராமன்கள் உங்களுக்கு முன்னதாகவே தியானம் செய்யும் இடத்துக்கு போய்விடுமாறு செய்துவிடுங்கள்./ உங்கள் தியானம் ஊமைப்படம்தான் எனபதை மறந்துவிடாதீர்கள்./ ஆக்ஷன் மட்டும்தான்.


Priyan Vadanad
ஜூன் 05, 2024 00:22

ஓடியாங்க ஓடியாங்க கிறிஸ்தவர், மதமாற்றுகிறவர் என்று அவுத்து விடுங்க./ ஒரு கிறிஸ்தவச்சி மாநிலத்தை ஆளலாமான்னு கேக்க ஓடியாங்க இப்படித்தான் ஒடிசாவுல ஓர் தமிழன் ஒடிசாவ ஆளலாமான்னு கேட்டு கவுத்துப்புட்டானுக./


மேலும் செய்திகள்





புதிய வீடியோ