உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன்னிப்பு கேட்கும்படி கமலுக்கு உத்தரவிட முடியாது; சுப்ரீம் கோர்ட்

மன்னிப்பு கேட்கும்படி கமலுக்கு உத்தரவிட முடியாது; சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''கன்னட மொழி குறித்து பேசியதற்கு கமலை மன்னிப்பு கேட்க உத்தரவிட முடியாது,'' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.தக் லைப் திரைப்படத்திற்கு கர்நாடகாவில் விதித்த தடைக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூன் 17) சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=krxgegal&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* கர்நாகாவில் தக் லைப் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது.* உரிய சான்றிதழ் பெற்ற பிறகு எந்த ஒரு படத்தையும் தடை செய்ய முடியாது.* படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.* நடிகர் கமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது நீதிமன்றத்தின் வேலை அல்ல.* கன்னட மொழி குறித்து பேசியதற்கு கமலை மன்னிப்பு கேட்க உத்தரவிட முடியாது.* கமல் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது.இந்த வழக்கில் வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Kundalakesi
ஜூன் 19, 2025 15:28

"படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்" - யாருக்கு பாதுகாப்பு. படத்தை பார்க்கும் மக்களுக்கா.


Kulandai kannan
ஜூன் 17, 2025 22:23

எப்படியும் எந்த தியேட்டரும் இந்த படத்தை திரையிடாது. அடுத்த கமல் படமும் அங்கு போணியாகாது.


அப்பாவி
ஜூன் 17, 2025 22:04

எத்தனையோ முக்கியமான வழக்குகளை அவசர வழக்கா விசரிக்க மறுத்தவங்க, இந்த சினிமா, கூத்தாடி வழக்கை உடனடியா விசாரிக்கிறாங்க. நாடு வெளங்கிடும்டா கோவாலு.


venugopal s
ஜூன் 17, 2025 21:12

சமஸ்கிருதத்துக்கும் ஹிந்திக்கும் வால் பிடிப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு பிடிக்காமல் போவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!


ஆரூர் ரங்
ஜூன் 17, 2025 21:50

venugopal என்ன மொழி?


spr
ஜூன் 17, 2025 21:06

இதனை தமிழக முதல்வரின் மகனே முன்னெடுத்து நடத்தும் ஒரு நிறுவனத்தின் பிரச்சினை என்றாலும், தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருக்கும் போது, கர்னாடக அரசு இதனை ஒரு அரசியல் பிரச்சினையாக மாற்றி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. இதனைக் கண்டிக்காமல், ஆளுநருக்கே காலக்கெடு வைத்த நீதிமன்றம் இந்த வழக்கின் மூலம் ஒரு தனிநபர் தேவையற்ற விளம்பரம் தேடித் கொள்கின்றார் என்பதனை அறிந்தும், இது போன்ற வழக்குகளை ஏற்பதற்கு தகுதியற்றது என ஒதுக்காமல், இது குறித்துக் கருத்து தெரிவிப்பதே, அவர்களுக்கு வேறு முக்கியமான வேலை எதுவுமே இல்லை என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. நீதிபதிகள் கண்ணியம் காக்க வேண்டுவது நாட்டின் மதிப்பைக் காக்கும் பிரச்சினை


Rajan A
ஜூன் 17, 2025 19:50

எவ்வளவோ வழக்குகள் தேங்கி நிற்கிறது. இது ரொம்ப அவசரமோ? புன்னகை மன்னன் குணாவாக மாறி ரொம்ப ஆண்டுகள் ஆகிவிட்டது. நமக்கு புரிந்தது கன்னடர்களுக்கு புரியவில்லையே அபிராமி


Jayamkondan
ஜூன் 17, 2025 19:23

உண்மையை சொன்னா கசக்கும்... கன்னடர்களுக்கு..


sankaranarayanan
ஜூன் 17, 2025 19:07

இப்படிப்பட்ட நீதி மன்றங்களின் மாறுபட்ட தீர்ப்புகளால்தான் நமது நாடே நரகமாகிக்கொண்டிருக்கிறது


பேசும் தமிழன்
ஜூன் 17, 2025 19:01

மன்னிப்பு கேட்கும்படி கமலுக்கு உத்தரவிட முடியாது ....சரி ....அப்போ படத்தை பார்க்கும்படி மக்களுக்கு உத்தரவிட முடியுமா.....வர வர நீதிமன்றங்கள் மீது இருந்த மரியாதையே போய் விட்டது......அதிலும் உச்சத்தில் இருக்கும் நீதிமன்றம் ....கேட்கவே வேண்டாம் .


சூரியா
ஜூன் 17, 2025 18:26

தனிப்பட்ட, வாய்கொழுப்பினால் வரும் பிரச்சனைக்கெல்லாம் அரசாங்கம் ஏன் பாதுகாப்பு தரவேண்டும்? திரையிட மறுக்கவும் வேண்டாம், பாதுகாப்பு தரவும் வேண்டாம்.


புதிய வீடியோ