உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா நாளை துவக்கம்

பெங்களூரு முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா நாளை துவக்கம்

பெங்களூரு: பெங்களூரு முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா நாளை துவங்குகிறது.மாதந்தோறும் சஷ்டி வந்தாலும், ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை சஷ்டி மிகவும் பிரசித்தி பெற்றது. பெங்களூரில் உள்ள முருகன் கோவில்களில் வரும் 2ம் தேதியில் இருந்து சஷ்டி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.கோவில்களில் நடக்கும் பூஜைகள் பற்றிய விபரம்:சிவன்ஷெட்டி கார்டன் ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் தண்டாயுதபாணி கோவில்:காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை; 3 ம் தேதி காலை 7:30 மணிக்கு அனுக்கிரக பூஜை, மாலை 6:00 மணிக்கு சுப்பிரமணிய மாலா மந்திரம் ஹோமம்; 4 ம் தேதி காலை 7:30 மணிக்கு சோமகும்ப பூஜை, மாலை 6:00 மணிக்கு ஸ்ரீ சுப்பிரமணிய மூல மந்திர ஹோமம்; 5ம் தேதி காலை 7:30 மணிக்கு விசாக சுப்ரமணிய ஹோமம், மாலை 6:00 மணிக்கு மஹாமங்களாரத்தி; 6 ம் தேதி காலை 7:30 மணிக்கு அங்குரா பூஜை, மாலை 5:00 மணிக்கு வேல் பூஜை; 7 ம் தேதி காலை 7:30 மணிக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹாரம்; 8 ம் தேதி மாலை 5:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம். சிறப்பு தீபாராதனை பெங்களூரு வேல் முருகபுரம் டாக்டர் டி.சி.எம்., ராயன் ரோடு, ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்: நாளை முதல் 7 ம் தேதி வரை தினமும் காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை. 7ம் தேதி மாலை 6:30 மணிக்கு சக்தி வேல் புறப்படுதல்; 6:30 மணிக்கு சூரசம்ஹாரம். ஹலசூரு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில்: நாளை காலை 8:30 மணி கங்கா பூஜை, கணபதி பூஜை; 3ம் தேதி காலை 9:00 மணிக்கு சூரிய காயத்ரி ஹோமம்; 4 ம் தேதி காலை 9:00 மணிக்கு ருத்ர காயத்ரி, கவுரிகாயத்ரி ஹோமம்; 5 ம் தேதி காலை 9:00 மணிக்கு துர்கா காயத்ரி ஹோமம்; 6ம் தேதி காலை 9:00 மணிக்கு விஷ்ணு காயத்ரி ஹோமம்; 7ம் தேதி காலை 9:00 மணிக்கு லட்சார்ச்சனை, வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம், இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹாரம்; 8ம் தேதி மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கல்யாண உற்சவம்.தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்: நாளை முதல் 7 ம் தேதி வரை தினமும் மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை சிறப்பு பூஜைகள். பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் கோவில் சார்பில் இலவசமாக வழங்கப்படும். பக்தர்கள், அர்ச்சனைக்கு வேல் மட்டும் வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும். அன்று வேல் அர்ச்சனையுடன், வள்ளி தெய்வயானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி உற்சவர் வருகை, மகா தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.இதற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா எம்.முனிராஜு, தலைவர் கே.தயாளகணி, பொது செயலர் டி.முனேகவுடா மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.காமராஜர் ரோடு ஸ்ரீ சடாக் ஷர ஞான சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்:இன்று காலை 10:00 மணிக்கு கணபதி ஹோமம், கேதார கவுரி கலச பூஜை; இரவு 7:00 மணிக்கு மஹா கணபதி உற்சவம்; நாளை முதல் 6ம் தேதி வரை தினமும் இரவு 7:00 மணிக்கு சுப்ரமணிய பிரகார உற்சவம்.7ம் தேதி காலை 8:30 மணிக்கு மஹாஅபிஷேகம்; காலை 10:30 மணிக்கு மஹா மங்களாரத்தி; மாலை 6:00 மணி சூரசம்ஹாரம்; 8ம் தேதி மாலை 6:30 மணிக்கு கல்யாண உற்சவம்; 9ம் தேதி காலை 8:30 மணிக்கு மஹா அபிஷேகம், மகா மங்களாரத்தி, பக்தோற்சவம்.பாஷ்யம் நகர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம்:நாளை காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை; நவ., 2 முதல் 5ம் தேதி வரை காலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவசனம், மஹா சங்கல்பம்; வாஞ்சால்ப ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்கந்தயாகம், திரவ்யாஹுதி, பூர்ணாஹூதி, கலச அபிேஷகம்; மஹா தீபாராதனை; மாலை 6:30 மணிக்கு ஞான சக்தி ஸ்ரீ சத்ரு சம்கார திரசதி அர்ச்சனை, ேஷாடசோபசாரம், மஹாதீபாராதனை; 2ம் தேதி ஸ்கந்த கணபதி அலங்காரம்; 3ம் தேதி தகப்பான் சுவாமி அலங்காரம்;4ம் தேதி மாலை 4:30 மணிக்கு டில்லி ஸ்ரீ குருஜி ராகவனின் குழுவினர் திருப்புகழ் இசை வழிபாடு, பழனி ராஜ அலங்காரம்; 5ம் தேதி சண்முகர் அலங்காரம்; 6ம் தேதி காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை தெய்வயானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, ஏகதீன லட்சார்ச்சனை, அதன் பின், சோசோபரசாரம், வெள்ளி கவச அலங்காரம்;7ம் தேதி காலை 7:30 மணிக்கு ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவசனம், பஞ்சகவ்யம், ஸ்ரீ கந்த சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி, கலசாபிேஷகம், மாலை 6:30 மணிக்கு தாயாரிடம் வேல் வாங்குதல், சூரசம்ஹாரம், வேல் வாங்கும் திருக்காட்சி அலங்காரம்;8ம் தேதி மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ கல்யாண சிவசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், அன்னதானம் மற்றும் திருமண தடை நீங்க, பூமாலை அணிவித்தல். பாலமுருகன் அலங்காரம் செய்யப்படுகிறது.காக்ஸ்டவுன் வரசித்தி விநாயகர் கோவில்:2ம் தேதி முதல் 8ம் தேதி வரை தினமும் கந்த சஷ்டி உற்சவம் நடக்கிறது. காலை 7:30 மணி: திருமுருகன் மூலவர், உற்சவர் அபிஷேகம், மாலை 5:30 மணிக்கு சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை; 7:30 மணிக்கு உற்சவர் புறப்பாடு.7ம் தேதி காலை 7:30 மணிக்கு சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை, 8:30 மணிக்கு அபிஷேகம்; மாலை 4:00 மணிக்கு சூரன் புறப்பாடு; 6:00 மணிக்கு சூரசம்ஹாரம்; 7:00 மணிக்கு அபிஷேகம்;8ம் தேதி மாலை 5:30 மணிக்கு வள்ளி தெய்வயானை திருமுருகன் திருக்கல்யாணம்.மரியப்பனபாளையா ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில்:2ம் தேதி முதல் 8 ம் தேதி வரை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு, தினமும் காலை 6:30 மணிக்கு அபிஷேகம்; 9:30 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வினியோகம், இரவு 7:00 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வினியோகம் நடக்கிறது.2ம் தேதி திருநீரு அலங்காரம்; 3ம் தேதி சந்தனம்; 4ம் தேதி மாதுளை பழம், 5ம் தேதி திராட்சி, முந்திரி, 6ம் தேதி பழங்கள், 7ம் தேதி ராஜ அலங்காரம், 8ம் தேதி வெண்ணெய் அலங்காரம் நடைபெறும்.நியூ திப்பசந்திரா பாலமுருகன் கோவில்:நவ., 7ம் தேதி ஸ்ரீகந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா நடக்கிறது. காலை 6:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம்.8ம் தேதி வள்ளி தெய்வயானை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்; காலை 9:30 மணிக்கு திருப்புகழ் பஜனையுடன் பூஜைகள் ஆரம்பம், அபிேஷகம், அலங்காரம், மாங்கல்யம் அணிவித்தல், மஹா மங்களாரத்தி, ஆர்.டி.நகர் அன்பர்கள் திருப்புகழ் குழுவினர் பஜனை பாடுகின்றனர்.15ம் தேதி சிவ பெருமானுக்கு மஹா அன்னாபிேஷகம் நடக்கிறது. காலை 9:30 மணிக்கு பூஜைகள் ஆரம்பம்; பகல் 12:00 மணிக்கு மஹா மங்களாரத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ