உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகைக்கு பாலியல் தொல்லை கன்னட நடிகர் அதிரடி கைது 

நடிகைக்கு பாலியல் தொல்லை கன்னட நடிகர் அதிரடி கைது 

பெங்களூரு : இளம் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான ஹேமந்த் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் பெங்களூரு, அன்னபூர்னேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஹேமந்த் குமார், 34. கன்னட நடிகர் மற்றும் தயாரிப்பாளர். ரிச்சி என்ற கன்னட படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். சின்னத்திரை இ வர் மீது, ராஜாஜி நகர் போலீஸ் நிலையத்தில், க டந்த 3ம் தேதி இளம் நடிகை ஒருவர் அளித்த புகார்: கன்னடத்தில் சின்னத்திரை, 'ரியாலிட்டி ஷோ'க்களில் பங்கேற்றுள்ளேன். 2022ல் தயாரிப் பாளர் ஹேமந்த் குமார் அறிமுகம் கிடைத்தது. தான் தயாரித்து நடிக்கும் ரிச்சி படத்திற்கு, என்னை ஒப்பந்தம் செய்தார். சம்பளமாக, 2 லட்சம் ரூபாய் பேசப்பட்டது. முன்தொகையாக, 60,000 ரூபாய் கொடுத்தார். படத்தின் முதற்கட்ட படப் பிடிப்பில் பங்கேற்றேன். பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. அவ்வப்போது நடந்த சூட்டிங்கில் பங்கேற்றேன். படப்பிடிப்பின் போது ஆபாசமாக உடை அணிந்து வர வேண்டும்; ஆபாசமாக நடிக்க வேண்டும் என்று, ஹேமந்த் குமார் வற்புறுத்தினார். மிரட்டல் அதற்கு மறுத்ததால், என்னை ஆபாசமாக தொட்டு, பாலியல் தொல்லை கொடுத்தார். படத்தை விளம்பரப் படுத்த மும்பைக்கு சென்றோம். அங்கு, என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். பெங்களூரு வந்ததும் என்னை தனியாக வர சொன்னார். நான் மறுத்ததால் ரவுடிகளை வைத்து என்னை துரத்தினார். படப்பிடிப்பு முடிந்ததும், மீதி பணத்தை கேட்ட போது காசோலை கொடுத்தார். அது, பணம் இல்லை என்று திரும்ப வந்தது. இது பற்றி அவரிடம் கேட்ட போது என்னை திட் டினார். பலர் என், 'மொபைல் போன்' எண்ணுக்கு அழைத்து மிரட்டினர். என் மொபைல் போன் நம்பரை, சமூக வலை தளங்களில் வெளியிட்டனர். எனக்கும், என் அம்மாவுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஹேமந்த் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஹேமந்த் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Thravisham
அக் 08, 2025 08:44

இங்கே டயமன்ட்க்கு எதிராக புகார் வந்தும் ஏன் நடவடிக்கை இல்ல. இங்கே இருப்பது ஏவல் துறை அங்கே இருப்பது காவல் துறை


பிரேம்ஜி
அக் 08, 2025 08:42

கைது சரி! அது என்ன அதிரடி கைது? சாதா கைது இல்லையா?


Mani . V
அக் 08, 2025 06:20

வாய்ப்புக்கு வலிய வருதுன்னு நினைச்சா, வசதியான இடத்துக்கு வந்த பிறகு இப்படித்தான் கோர்த்து விட்டு விடுவார்கள். கேட்டால் பத்து வருடம் முன்பு, பதினைந்து வருடம் முன்பு என்று சொல்வார்கள்.


Keshavan.J
அக் 08, 2025 11:41

உன்னை பற்றி யாராவது 10 வருடம் கழித்து புகார் குடுப்பாங்க என்று நினைக்கிறேன்


சமீபத்திய செய்தி