உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு 6 நாள் போலீஸ் காவல்

கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு 6 நாள் போலீஸ் காவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மைசூரு: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனை 6 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பிரபல கன்னட நடிகர் தர்ஷன், 47, இவரையும் நடிகை பவித்ரா கவுடா என்பவரையும் தொடர்பு படுத்தி, சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த மருந்தாளுர் ரேணுகா சுவாமி என்ற 33 வயது இளைஞர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 9-ம் தேதி பெங்களூருவில் ஒரு வாயக்காலில் ரேணுகா சுவாமி பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் ரேணுகா சுவாமியை, சிலர் அடித்து கொலை செய்து வாய்க்காலில் வீசியது தெரியவந்தது.இந்த கொலை சம்பவத்தில் கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா ஆகியோருக்கும் கொலையில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு போலீசார் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடாவை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தர்ஷன், பவித்ரா கவுடாவை 6 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை