உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்ன அங்க கூப்டாக, இங்க கூப்டாக! கோவை சரளா ஸ்டைலில் சீமான் லகலக!

என்ன அங்க கூப்டாக, இங்க கூப்டாக! கோவை சரளா ஸ்டைலில் சீமான் லகலக!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்குடி: என்னை சின்னமனூரில் கூப்பிட்டாங்க, மதுரையில் கூப்பிட்டாங்க என்று சினிமா டயலாக் பேசி 2026ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி சேருவேனா, இல்லையா என்று சீமான் நையாண்டி செய்துள்ளார்.

ஸ்டைல்

கழுத்து நரம்பு புடைக்க பேசுவது, கேள்வி கேட்பவர்களிடம் எதிர்கேள்வி கேட்டு மடக்குவது, மேடையில் ஆவேசம் பிளஸ் ஜனரஞ்சகமாக பேசுவது என்பது நாம் தமிழர் சீமானின் ஸ்டைல். அவர் செல்லும் இடங்களில் அவரது பேச்சைக் கவனிக்கவும், நிருபர்களுக்கு அளிக்கும் பேட்டியை கேட்கவும் தனிக்கூட்டம் இருக்கிறது.

நையாண்டி

அதில் லேட்டஸ்ட்டாக காரைக்குடியில் அவர் அளித்த பேட்டி தான் வைரல். எந்த கேள்வி என்றாலும் கலக்கல் பதில் தரும் அவர் இம்முறையும் நக்கல், நையாண்டி என நவரசங்களுடன் பேசி இருக்கிறார்.காரைக்குடியில் அவர் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறியதாவது;

என்ன செய்கின்றனர்?

மீனவர்கள் எல்லை தாண்டி வருகின்றனர் என்பது பிரச்னையாக பார்க்கப்படுவது இல்லை. அவர்கள் தமிழர்கள் என்பதாலேயே தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். 39 எம்.பி.,க்கள் என்ன செய்கின்றனர், 880 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். மத்திய,மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

யாருடன் கூட்டணி?

'தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாங்கள் பெற்ற ஓட்டுக்களை காங்கிரசால் பெற முடியுமா? தேர்தலுக்கு இன்னமும் 2 ஆண்டுகள் உள்ளதால் பின்னர் அதை பற்றி பேசலாம்' என்றார் சீமான்.அப்போது நிருபர் ஒருவர், 2026ம் ஆண்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பது பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு சீமான் பதில் அளித்ததாவது;

தனித்தே போட்டி

2026ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். அதையே திரும்ப, திரும்ப கேட்கக்கூடாது. என்னுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதை என்னோடு சேர விரும்புவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நான் இவருடன் கூட்டணி சேர போகிறேன், அவருடன் கூட்டணி வைக்க போகிறேன் என்று சொல்பவன் அல்ல.

கோவை சரளா டயலாக்

என்னை சின்னமனூரில் கேட்டாக, மதுரையில் கூப்டாக என்று நடிகை கோவை சரளா போல பேசிக்கொண்டு இருக்க நான் தயாராக இல்லை. என் பாதை தனி, பயணம் தனி, எனக்கு ஒரு கனவு இருக்கு, பூமியின் சொர்க்கமாக என் நாட்டை நான் படைக்க ஆசைப்படுகிறேன்.

மக்களை நேகிக்கிறேன்

அதற்காக இவருடன் கூட்டணி, அவருடன் கூட்டணி என்று சேரப்போவது இல்லை. என்னோடு சேர்ந்தால் நாடும், மக்களும் நன்றாக இருப்பார்கள் என்று நினைத்தால் வரலாம், அது யாராக இருந்தாலும் சரி. இல்லை என்றால் ஆளை விடுங்க. நான் என் மக்களை முழுமையாக நேசிக்கிறேன், நம்புகிறேன் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ராமகிருஷ்ணன்
செப் 16, 2024 21:18

உன்னை ஆட்சியில் அமர வைத்தால் மக்கள் அனைவரும் உன்னை போலவே மெண்டல் ஆகி கற்பனை உலகில் சஞ்சரித்து நீ சொல்லும் சந்தோஷத்தில் மிதப்பார்கள். உன் மேடை பேச்சுகளில் சாத்தியம் ஆக கூடிய ஒரு திட்டத்தை கூட சொல்ல வில்லை, உணர்ச்சி வசப்பட்டும் சிரிக்கவும் தான் பேசுரே.


தாமரை மலர்கிறது
செப் 16, 2024 21:03

சீமான் ஜனரஞ்சகமான சிறந்த இயக்குனர் மற்றும் நல்ல நடிகர். கிருத்துவராக பிறந்தாலும், தெலுகு ஹிந்து பெண்மணியை மணந்தபிறகு, நல்ல முழு தமிழ் ஹிந்துவாக மாறிவிட்டார். அமித் ஷா சாணக்கியத்தனத்தால், சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை, பெரியாரை ரவுண்டு கழட்டி திராவிட ஓட்டுக்களை வேட்டையாடுகிறார். இதை திறமையாக செய்து வருகிறார். ஏற்கனவே அதிமுக அழிந்துவிட்டது. இன்னொரு திராவிட மாங்கா மட்டுமே உள்ளது. மொத்த திராவிட நரிகூட்டம் ஒழிந்தபிறகு, வருங்காலத்தில் பிஜேபி க்கும் சீமானுக்கும் தான் தமிழகத்தில் போட்டி நிலவும். அமித் ஷா அறிவுறுத்தலின்படி , திராவிட நரிகளை ஒழிக்க வந்தவர் சீமான்.


kamaraj jawahar
செப் 17, 2024 01:57

10 அமித் ஷா வந்தாலும் அது தமிழகத்தில் நடக்காது. நன்றி


Ms Mahadevan Mahadevan
செப் 16, 2024 19:31

திமுக மட்டுமா தீய சக்தி எல்லா அரசியல் கட்சிகளும் தீயசக்தி தான். ஒருகட்சிக்கும் எளிய மக்களை பற்றிய அக்கறை கிடையாது.


Gobikrishnan Narayanasamy
செப் 16, 2024 17:27

Appidiya


Palanisamy Sekar
செப் 16, 2024 17:11

ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்கிற மாதிரிதான் தற்போது சீமானின் நிலைமை. ரொம்போ எதிர்பார்த்தார் விஜய் அழைப்பர் அல்லது பேட்டியிலாவது சொல்வார் சீமானுடன் கூட்டணி என்று. பொறுத்து பார்த்த சீமானுக்கு உண்மையிலேயே கடுப்பாகிவிட்டார். கூட்டணிக்கு அவர் அழைக்கப்படுவார் அதிமுகவிலிருந்து என்பது உண்மைதான். சீமானுக்கு அரசியலில் சாணக்கியத்துவம் கிடையாது உணர்ச்சி கொப்பளிக்க பேசுவார் தவிர இந்த கட்சியை இவர்களோடு சேர்ந்தால் ஜெயிக்க முடியும் என்கிற கணக்கு தெரியவில்லை. ஒருமுறை விட்டுவிட்டால் அதன் பிறகு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு துயரப்படணும் என்கிற சிந்தனையே இல்லாமல் சினிமா வசனம் போல பேசுகின்றார். நிறைய இளைஞர்களை தன்பக்கம் இழுத்துவிட்டார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதே சமயம் அவர்களது வாக்கு வங்கி வீணாகிவிடுகின்றதே. காரணம் சீமானுக்கு அரசியல் சூட்ச்சுமம் கிடையாது. அரசியலில் அனைவருமே தனித்து நிற்கின்றார்கள் என்றால் சீமானின் இன்றைய நிலைமையை யாருமே குறை சொல்ல முடியாது. திமுக ஒருபோதும் தனித்து நின்றதே கிடையாது. பலருக்கு வாய்க்கரிசி போல கொடுத்து கூட்டணியை விட்டுவிடாமல் அனுசரித்து சென்று பதவிசுகத்தை அனுபவிக்கினறரர்கள் ஊழலிலும் ஈடுபட்டு. அதனையெல்லாம் ஒழிக்க தனித்து நிற்பது என்பது வேடிக்கை வினோதம். சீமான் தனது நிலைமையை மீண்டும் கணக்கிட்டு மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் தமிழகத்தில் தீயசக்தியை விரட்ட ஒரு நல்ல செயலாக இருக்கும்.


Anbu Raj
செப் 16, 2024 16:59

சீமான் எனும் தலைவன் இல்லையென்றால் ஈழத்தமிழர் பிரச்னை எப்போதோ மறந்திருப்போம்


Chandran,Ooty
செப் 16, 2024 18:52

தமிழகத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் போது ஈழத்தமிழர் பிரச்சினை எவனுக்குய்யா வேணும் வந்துட்ட சீமான் ஒரு ஆளுன்னு அவனை தூக்கிகிட்டு போவியா...


Anand
செப் 16, 2024 19:16

ஆமாம், அங்கு அமைதி ஏற்படக்கூடாது ஏற்படவும் விடக்கூடாது, தூண்டிவிட்டுக்கொண்டே குளிர் காயவேண்டும் அப்போது தான் இங்கு நமக்கு பிழைப்பு நடக்கும்......


theruvasagan
செப் 16, 2024 16:49

அது சரி. உங்க பாதை உங்க பயணம் உங்க கனவு எல்லாம் வித்தியாசமானதுதான். நாங்களும் உங்க வழிக்கு வந்தால் கிறுக்கு புடிச்சு இப்படிசெஞ்சுட்டானுக என்று ஊர் உலகம் எள்ளி நகையாடுமே.


இசக்கிமுத்து,தூத்துக்குடி
செப் 16, 2024 16:25

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சேர்ந்து ஏ.கே.74 ரக மிஷின் கன் துப்பாக்கியால் சீமான் சுட்ட அரிசிக் கப்பல் சமீபத்தில் மன்னார் வளைகுடா நடு கடலில் கண்டுபிடிக்கப் பட்டது.


ராஜவேல்,வத்தலக்குண்டு
செப் 16, 2024 16:20

பூமியின் சொர்க்கமாக ஒரு நாட்டை உருவாக்கப் போகிறாராம் ஒருவேளை திரிசங்கு சொர்க்கமாக இருக்குமோ?


Anbu Raj
செப் 16, 2024 17:03

என்னசெய்ய போதையிலே இருந்து இலவசத்தை எதிர்பார்த்து ஓட்டுக்கு காசு வாங்கி , இதெல்லாம் பழக்கப்பட்ட மக்களுக்கு அவர் பேசுவது அப்படித்தான் தெரியும்


Ramanujadasan
செப் 16, 2024 16:18

கர்நாடகத்தில் ஒரு வாட்டாள் நாகராஜ் , தமிழக்தில் ஒரு சீமான் . வெறும் வெறுப்பை மட்டுமே பிரச்சாரம் செய்து வரும் கும்பல்களில் இவர்கள் இருவரும் அடக்கம் . செறுத்தைகளும் , திராவிடர்களும் கூட இத்தைகைய கும்பல்களே


Anbu Raj
செப் 16, 2024 17:04

சங்கித்தானே நீங்க ஹா ஹா ஹா ஹா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை