வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காங்கிரஸ் கட்சி மற்றும் ஆட்சி நாட்டிற்கும், சமூகத்திற்கும், வீட்டிற்கும் மற்றும் ஹிந்துக்களுக்கும் கேடு. அழிக்க பட வேண்டிய தீய சக்தி. எந்த ஒரு ஹிந்துவும் இவனுகளுக்கு வாக்களிக்க கூடாது.
பெங்களூரு : சட்டசபையில் முதல்வர் சித்தராமையா சார்பில், சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், மத்திய அரசின் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்து பேசியதாவது:சட்ட திருத்தங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டு பார்லிமென்ட் குழு, பார்லிமென்டின் நீண்டகால மரபுகளை புறக்கணித்து உள்ளது.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துகளை கருத்தில் கொள்ள தவறி, ஒருதலைபட்சமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்டு உள்ளனர்.வக்பு சட்டத்தில் கொண்டு வர முன்மொழியப்பட்டு உள்ள திருத்தம், மாநில அரசின் நிர்வாக மற்றும் சட்டமன்ற அதிகாரத்தை குறைக்கிறது. சமத்துவம், சமத்துவ கொள்கைக்கு எதிராக உள்ளது.முன்மொழியப்பட்டு உள்ள திருத்தங்கள் மிகவும் தீவிரமானது. இதனால் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசுகையில், ''நாங்கள் இந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். இந்த அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறது.இது, முஸ்லிம்களை திருப்திபடுத்துவதின் உச்சம். வக்பு வாரியத்தால் விவசாயிகள் துன்பங்களை அனுபவித்தனர். இதை பார்த்து கொண்டு அரசை கண்களை மூடியது,'' என்றார்.தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் கட்சி மற்றும் ஆட்சி நாட்டிற்கும், சமூகத்திற்கும், வீட்டிற்கும் மற்றும் ஹிந்துக்களுக்கும் கேடு. அழிக்க பட வேண்டிய தீய சக்தி. எந்த ஒரு ஹிந்துவும் இவனுகளுக்கு வாக்களிக்க கூடாது.