உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் டி.ஜி.பி., கொலை; மனைவியிடம் போலீஸ் விசாரணை

முன்னாள் டி.ஜி.பி., கொலை; மனைவியிடம் போலீஸ் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு; கர்நாடகாவில் முன்னாள் டி.ஜி.பி. அவரது வீட்டிலேயே கத்தியால் சரமாரியாக குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; கர்நாடகாவில் டி.ஜி.பி.,யாக இருந்து ஓய்வு பெற்றவர் ஓம்பிரகாஷ், 68. பெங்களூருவில் உள்ள ஹெச்.எஸ்.ஆர்., லேஅவுட்டில் வசித்து வந்த அவர் வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.3 மாடிகள் கொண்ட அவரது வீட்டின் தரைதளத்தில் உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரின் மனைவி பல்லவி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்ற போலீசார், விசாரணையை தொடங்கினர். அப்போது ஓம்பிரகாஷ் கொல்லப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். அவரின் உடலில் கத்தியால் குத்தப்பட்டு இருப்பதற்கான அடையாளங்கள் கண்டனர். விசாரணையில் ஓம்பிரகாஷ் குடும்பத்தில் பணப்பிரச்னை இருந்து வந்ததும். ஏராளமான கடன் வாங்கி இருந்ததே இதற்கு காரணம் என்பதும் தெரிய வந்தது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே வாக்குவாதம் எழுந்து, ஓம் பிரகாஷை மனைவி பல்லவியே கத்தியால் குத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில் அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொல்லப்பட்ட ஓம்பிரகாஷ், பீகார் மாநிலம் சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1981ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரியான அவர், புவியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். கர்நாடக கேடர் அதிகாரியான ஓம்பிரகாஷ், ஹரப்பனஹள்ளியில் உதவி காவல் கண்காணிப்பாளராக தமது பணியைத் தொடங்கியவர். அதனை தொடர்ந்து பல பதவிகளை வகித்த அவர், 2015ம் ஆண்டு பிப்.28ம் தேதி கர்நாடகா டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டார். 2017ல் அவர் ஓய்வு பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
ஏப் 21, 2025 10:32

பொழைக்கத் தெரியாத அதிகாரியா இருந்தால் கொலையும் செய்வாள் பத்தினி. ஏட்டு, 301, 501 எல்லாம் கோடியில் கொழிக்கறாங்க. அவிங்களை என்ன பண்ணிச்சு சட்டமும், நீதியும்?


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 06:04

பகோடா காதர் சாயலில் இருக்காரே


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 06:04

பகோடா காதர் சாயலில் இருக்காரே


Barakat Ali
ஏப் 21, 2025 04:37

[ஏராளமான கடன் வாங்கி இருந்ததே இதற்கு காரணம் என்பதும் தெரிய வந்தது.] எங்க ஊர்ல போலீசுக்கு அந்த நெலமையே வராது .. கேட்டா கொடுத்தே ஆகணும்.. திருப்பிக் கொடுக்குறதுன்ற பேச்சுக்கே இடமில்லை .... பொழைக்க தெரியாத ஆப்பீசரு ....


Kasimani Baskaran
ஏப் 21, 2025 04:00

உயர் அதிகாரி கடன் வாங்கினால் நேர்மையானவராக இருந்திருக்க வேண்டும்.. நல்ல ஆத்மா...


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 21, 2025 00:11

நல்ல பீமபுஷ்டி அல்வா விளம்பரம் போல காட்சியளிக்கிறார்.


ديفيد رافائيل
ஏப் 20, 2025 23:50

போலீஸ் பதவியில் இருக்கும் போது எத்தனை பேரை சித்ரவதை செய்தானோ தெரியல, retirement காலத்தில் அரசு ஓய்வுதிய பணத்தில் நிம்மதியா வாழ முடியவில்லை. இவனால் பாதிக்கப்பட்டவர்களின் சாபம்.


Keshavan.J
ஏப் 20, 2025 20:48

பாவம், அவர் ஆத்மா ஷாந்தி அடையட்டும். டிஜிபி யாக இருந்தவருக்கு பண பிரச்சனை. ரொம்ப தூய்மையான அதிகாரியா இருந்திருக்கிறார்...


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 21, 2025 00:14

போதை, மது, மாது, சூதாட்டம் என்று பணவிரயம் செய்தால் கூட பணப்பிரச்சினை வரும். போலீசில் லஞ்சம் வாங்காத நல்ல போலீஸ் என்று யாருமே கிடையாது. அப்படி நல்ல போலீஸ் ல்லாம் டிஜிபி ஆகவே முடியாது.


Ramesh Sargam
ஏப் 20, 2025 20:12

கொலையும் செய்வாள் பத்தினி என்று ஒரு பழமொழி தமிழில் கூறப்படும். அதுபோல இந்த டி.ஜி.பி. யின் மனைவி இருப்பார் போல.


மீனவ நண்பன்
ஏப் 20, 2025 22:32

நீங்க கருத்து போட்டுக்கிட்டே காலத்தை கழிக்கிறீங்க ..கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க