உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 12 நாள் மாதவிடாய் விடுமுறை: கர்நாடகா அரசு அறிவிப்பு

12 நாள் மாதவிடாய் விடுமுறை: கர்நாடகா அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் விடுமுறையாக, ஆண்டுக்கு, ஊதியத்துடன் 12 நாட்கள் விடுமுறை அளிக்க வகை செய்யும் கொள்கை முடிவுக்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அரசு, தனியார் என, அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, தேசிய அளவில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதை கேரளா, ஒடிஷா, பீஹார் ஆகிய மாநில அரசுகள் நிறைவேற்றி உள்ளன. இந்த மாநிலங்களில் அம்மாநில அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. இதே போன்று, கர்நாடகாவில் பணிபுரியும் பெண்களுக்கும் மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், 'மாதவிடாய் விடுமுறை கொள்கை 2025'க்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதுகுறித்து, மாநில தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது: பெண்களுக்கு ஒரு ஆண்டுக்கு 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறையை அவர்களின் மாதவிடாய் சுழற்சியின்படி எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம் நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்டுக்கு 12 நாட்கள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ