உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகா அணைகளில் இருந்து 65,000 கனஅடி நீர் திறப்பு; ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து 65,000 கனஅடி நீர் திறப்பு; ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தருமபுரி: கனமழை காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., எனப்படும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ்., அணையின் நீர்மட்டம் 120.90 அடியாக உள்ளது. நீர் இருப்பு 44.194 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 33,000 கனஅடியாக உள்ளது. கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீரும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. 24,000 கனஅடியாக இருந்த நிர்வரத்து 32,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. எனவே, சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்கிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியாக உள்ளது. நீர் இருப்பு 82.34 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 18,290 கனஅடியாக இருக்கிறது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N Srinivasan
ஜூன் 26, 2025 16:56

இன்னிக்கித்தான் காவேரி ஆணையத்தின் தீர்ப்பு வந்தது தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உடனே கர்நாடக பயந்து திறந்து விட்டது பார் இதுதான் எங்களுடைய திராவிட மாடல் ஆட்சி. சும்மா அதிருது இல்ல ???


Ramesh Sargam
ஜூன் 26, 2025 12:12

ஒகேனக்கல்லிலிருந்து கடலில் சேரும்வரையில் மேட்டூர் அணையைவிட்டு, வேறு எங்காவது ஒரு பெரிய அணையை தமிழக அரசு கட்டி கடலில் வீணாக சேரும் நீரை சேமித்தால், வெயில் காலத்திலும் தமிழக விவசாயிகள், தமிழக மக்களுக்கு தண்ணீர் பிரச்சினையே இருக்காது. கருணாநிதிக்கு 700 கிலோவில் வெங்கலத்தில் சிலை வைக்க பணம் இருக்கிறது. அதைத்தவிர ஊர் முழுக்க சிலை வைக்க பணம் இருக்கிறது. ஆனால் இதுபோன்ற மக்களுக்கு உபயோகமா அணை கட்ட பணம் இல்லை என்று கூறுவது. என்னடா ஆட்சி புரிகிறீர்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை