உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் உட்பட 3 பேரை கைது செய்ய தடை

கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் உட்பட 3 பேரை கைது செய்ய தடை

பெங்களூரு:கூட்ட நெரிசலில் சிக்கி ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் உயிரிழந்த வழக்கில், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் உட்பட மூன்று பேரை கைது செய்ய தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல்., கோப்பையை வென்றதை கொண்டாடும் கையில், கடந்த 4ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மைதானத்திற்கு முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பெண்கள் உட்பட, 11 பேர் உயிரிழந்தனர்.இது தொடர்பாக கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் கிரிஷ் அளித்த புகாரில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தினர், ஆர்.சி.பி., நிர்வாகம், டி.என்.ஏ., என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் மீது, கப்பன் பார்க் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

அரசு தான்

இந்நிலையில் தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் சங்க தலைவர் ரகுராம் பட், செயலர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் நேற்று ரிட் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ''மனுதாரர்கள் இந்த சம்பவத்தில் தங்களுக்கு பங்கு இல்லை என்று கூறி பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது.''விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். நீதிமன்றத்தின் அதிகார வரம்பை விட்டு வெளியேற வேண்டாம். மனுதாரர்களை போலீஸ் கைது செய்யக் கூடாது,'' என உத்தரவிட்டார். மனு மீதான அடுத்த விசாரணையை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சிறையில் அடைப்பு

இதற்கிடையில் 11 பேர் இறந்த வழக்கில், ஆர்.சி.பி., அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசலே, டி.என்.ஏ., நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யு, ஊழியர்கள் கிரண், சுமந்த் ஆகிய நான்கு பேர் நேற்று காலை கைது செய்யப்பட்டனர்.

அரசியல் செயலர் நீக்கம்

ரசிகர்கள் கூட்டம் பற்றி அரசுக்கு தகவல் கொடுக்காத விவகாரத்தில், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ஹேமந்த் நிம்பால்கரை, தகவல் தொடர்பு துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக அரசு இடமாற்றம் செய்துள்ளது.முதல்வரின் அரசியல் செயலரும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான கோவிந்தராஜ் கொடுத்த நெருக்கடியால் தான், விதான் சவுதா, சின்னசாமி மைதானம் என்று, இரண்டு இடங்களிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தன் அரசியல் செயலர் பதவியில் இருந்து கோவிந்தராஜை, முதல்வர் சித்தராமையா நீக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kalyan Singapore
ஜூன் 07, 2025 12:39

3 பந்துகளில் வெளியேறி பெங்களூர் அணியை வெற்றி பெறச்செய்த பஞ்சாப் அணியின் தலைவன் ஷ்ரேயஸ் ஐயர் என் கைது செய்யப்படவில்லை ? இப்படியெல்லாம் கூட கர்நாடக உயர் நீதி மன்றம் கேள்விகேட்டாலும் ஆச்சர்யபட முடியாது


gopala kadni
ஜூன் 07, 2025 07:57

இனிமேல் எதுவுமே பண்ண முடியாது. ஒருத்தர் மேலே இன்னொருவர் பழி சொல்லிக் கொண்டே போகலாம். கடைசியில் அந்த 11 மக்கள் போனது போனதுதான்


Mecca Shivan
ஜூன் 07, 2025 07:32

உண்மையில் கைதுசெய்யப்படவேண்டிய நபர்கள் இவர்கள் மட்டுமல்ல , சித்து, சிவகுமார் மாறும் மாநகர கமிஷனர் அந்த பகுதி துணை கமிஷனர்கள் ..போலீசுக்கு தெரியாமல் அவர்கள் கூடவில்லை ..அதேசமயத்தில் போலீஸ் அனுமதி பெறாமலே நடித்திய குழுவும் குற்றவாளிகளே


Kasimani Baskaran
ஜூன் 07, 2025 07:27

இந்த கொலையை வைத்து நீதிமன்றம், வக்கீல்கள் போன்ற அனைவரும் சம்பாதிப்பார்கள் - ஆனால் ஏன் நடந்தது என்பதை மட்டும் விசாரிக்க மாட்டார்கள்...


VENKATASUBRAMANIAN
ஜூன் 07, 2025 07:07

ஆடத்தெரியாதவனின் செயல். இவர்கள் செய்த தவறுகளுக்கு பலிகடா ஆக்கப்படுகிறார்கள். நியாயமாக பார்த்தால் முதல்வர் துணை முதல்வர் இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும். அந்த நேர்மையை இவர்களிடம் எதிர் பார்க்க முடியாது.


m.arunachalam
ஜூன் 07, 2025 06:00

கண் துடைப்பு பற்றிய செய்திகளை படிக்க தயாராகுங்கள் . தெளிதல் நலம் .


நிக்கோல்தாம்சன்
ஜூன் 07, 2025 04:17

எல்லாரையும் சஸ்பெண்ட் செய்து காட்டியுள்ள சித்தராமையா dk சிவகுமாரையும் பதவி நீக்கம் செய்திருந்தா வரவேற்றிருக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை