உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழலில் கர்நாடகா நம்பர் ஒன் முதல்வரின் ஆலோசகர் அதிரடி

ஊழலில் கர்நாடகா நம்பர் ஒன் முதல்வரின் ஆலோசகர் அதிரடி

கொப்பால் :''ஊழலில், நாட்டிலேயே கர்நாடகா நம்பர் ஒன் இடத்தில் உள்ளது,'' என, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி கூறினார்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வரின் நிதி ஆலோசகராக பசவராஜ் ராயரெட்டி உள்ளார். இந்நிலையில், பிராந்திய ஏற்றத்தாழ்வு குறைதீர் குழுவின் மாவட்ட அளவிலான கலந்துரையாடல் கூட்டம், கொப்பாலில் நேற்று நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ikh9p6lh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருள் சூழும்இதில், பசவராஜ் ராயரெட்டி பேசியதாவது:இன்றைய காலத்தில் தேர்தல்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. சாதாரண நபர், அரசியல் கட்சி தொண்டரால் தேர்தலில் களமிறங்க முடியாது. இது வெட்கக்கேடான விஷயம்.இன்று ஜாதி, மதத்தின் அடிப்படையில் அரசியல் நடக்கிறது. எனவே, மக்கள் நன்றாக சிந்தித்து, வளர்ச்சிக்காக செயல்படும் கட்சி மற்றும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். நாட்டில் நடக்கும் ஊழல் குறையவில்லை. மக்கள் இனியும் சிந்திக்காவிட்டால், வரும் நாட்கள் நம்மை இருள் சூழும்.ஆட்சியில் எந்த கட்சி இருந்தாலும் ஊழல் நடக்கிறது. ஊழலில், நாட்டிலேயே கர்நாடகா நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. ஊழல் பரவலாக இருப்பதால், வளர்ச்சி பணிகள் தரமாக இருப்பது இல்லை. 50 - 60 ஆண்டுகள் இருக்க வேண்டிய அரசு கட்டடங்கள், 10 ஆண்டுகளிலேயே விழுந்து விடுகின்றன.பெருமளவில் ஊழல் நடக்கும் நிலையில், பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை எப்படி சரி செய்வது? மக்கள் பிரதிநிதிகள் எப்படி இருப்பரோ, அதன்படியே அதிகாரிகளும் இருப்பர். முதல்வர் என்ன கருத்து கூறியிருந்தாலும், ஊழல் விஷயத்தில் என் கருத்தில் மாற்றம் இல்லை. மக்கள் பிரதிநிதிகளை போன்று, அதிகாரிகளும் ஊழல்வாதிகள் தான்.இவ்வாறு அவர் பேசினார்.அதிருப்திபசவராஜ் ராயரெட்டி, அரசு மீது அதிருப்தி தெரிவிப்பது, இது முதல் முறை அல்ல. இதற்கு முன், காங்., அரசின் வாக்குறுதி திட்டங்கள் குறித்தும் ஆட்சேபம் தெரிவித்தார்.'இலவச திட்டங்களால், மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. வளர்ச்சி பணிகளுக்கு நிதி வழங்குவதில்லை. வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன' என பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

adalarasan
ஏப் 10, 2025 22:28

மத்திய அமைச்சரே,therdhalukku செலவிட தன்னிடம்,panam இல்லை, ஆகையால் போட்டியிட முடியவில்லை என்று ஓபன் ஆக சொல்லிவிட்டார்.


Subash BV
ஏப் 10, 2025 18:02

Cats out of the bag. Its secret CONGRESS FAMOUS FOR BRIBE SUITCASES POLITICS. Their own karnataka MLA admitted they have AMASSED wealth more than sufficient for their third generation due to the blessing of congress bosses. HENCE THEY HAVE TO SAFE GAURD THEM. HE TOLD THIS WHILE ED TOOK ACTION ON RAHUL AND SONIA. BE ALERT.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 10, 2025 05:59

தமிழகத்தில் பலரது மைன்ட் வாய்ஸ் தமிழகம் தான் முதலிடம் என்று நினைத்து கொண்டு இருந்தோம். அதுக்குள்ள கர்நாடக முந்திருச்சே. ஷேம் ஷேம் பப்பி ஷேம்.


Kasimani Baskaran
ஏப் 10, 2025 03:56

போக்கத்த பயல்கள்.. எப்படி வாட்டர் கேட்டை விட பெரிய அளவில் சில பல ஊழல்கள் செய்து உலகையே மூக்கின் மேல் விலை வைக்க வைத்த தீம்க்காவை மிஞ்சமுடியும் என்று ஒரு கேள்வி கேட்க துப்பில்லாதவர்கள்...


N Sasikumar Yadhav
ஏப் 10, 2025 02:13

இது இலவசங்கள் கொடுத்து ஆட்சியில் அமரும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் . இலவசங்கள் கொடுத்து ஆட்சி அமைத்து ஆட்டய போட கற்றுத்தந்த கட்சி தமிழக திருட்டு திமுக முன்னோடி


தமிழன்
ஏப் 10, 2025 01:59

இவர் பேசியிருப்பது உண்மை நாடு முழுவதும் ஊழல் புரையோடி உள்ளது எந்த அரசும் அதிகாரிகளும் ஊழல் செய்வதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளது ஆனால் நாங்கள்தான் நாட்டிலேயே யோக்கியமான கட்சி என்று இந்தியாவிலுள்ள அனைத்து கட்சிகளும் கூவுகின்றது இத்தனை நல்ல கட்சிகள் இருந்தும் இன்று வரை நாடு சுடுகாடாக இருப்பது ஏன்?? எவனும் அரசியலில் யோக்கியன் இல்லை என்பதே உண்மை இதை மக்கள் என்று உணர்கிறார்களோ அன்றுதான் நாடு முழுவதும் நல்லாட்சி அமையும்


ராமகிருஷ்ணன்
ஏப் 10, 2025 01:24

அதெல்லாம் கிடையாது, நெம்பர் ஒன் முதல்வர் நம்ம விடியாத விடியல் தான்


Nava
ஏப் 10, 2025 14:32

விடியலுக்கு இணை யாரும் இருக்க முடியாது. விடியலுக்கு இணை விடியல் அரசன் நம்ம சுடாலின் மட்டுமே.


xyzabc
ஏப் 10, 2025 00:24

சார், எங்க தமிழகத்தை இரண்டாவது இடத்துக்கு தள்ள வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை