உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சபரிமலையில் இன்று கார்த்திகை தீபம்

 சபரிமலையில் இன்று கார்த்திகை தீபம்

சபரிமலை: சபரிமலையில் கார்த்திகை தீபம் இன்று ஏற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் திருக்கார்த்திகை நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால் கேரள கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று நடை பெறுகிறது. சபரிமலையில் மாலை தீபாராதனை நேரத்தில் சன்னிதானத்தின் முன்புறமுள்ள கோபுர விளக்குகளில் தீபங்கள் ஏற்றப்படுவதோடு கோயில் சுற்றுப்புறங்கள் அனைத்தும் தீப ஒளியில் ஜொலிக்கும். மாலை 6:30 மணிக்கு தீபாராதனைக்கு பின்னர், தந்திரி மகேஷ் மோகனரரு ஸ்ரீ கோயில் முன்புறமுள்ள மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றுவார். தொடர்ந்து எல்லா விளக்குகளிலும் தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபம் காரணமாக சபரிமலை பூஜைகளில் வேறு மாற்றங்கள் எதுவும் இல்லை. வழக்கமான நேரங்களில் அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ