உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.அதன்படி விசாரணையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தவெக, இதற்காக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளது.சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதை உடனடியாக விசாரிக்கவும் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.மனுவில், கரூர் சம்பவத்திற்கு வழிவகுத்த காரணம், சமூக விரோதிகளின் தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளது. இதைத் தொடர்ந்து பிற மனுக்களுடன் சேர்த்து தவெக மனுவையும் இணைத்து இன்று விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி கவாய் தெரிவித்து இருந்தார்.தவெகவை போன்று, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சந்திரா என்பவரின் கணவரும், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார். சிறப்பு விசாரணைக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும், மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவன் ஒருவரின் தந்தையும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுக்களை , நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று (அக்.10) விசாரணை நடத்தியது.

தவெக வாதம்

தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன், ரவீந்திரன் ஆஜராகி உள்ளனர். தவெக சார்பில் வழக்கறிஞர்கள் தாமா சேஷாத்ரி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்தனர். அவர்கள், ''போலீசார் அறிவுறுத்தலின் படியே கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து விஜய் வெளியேறினார். விஜய் இருந்திருந்தால் நிலைமை மேலும் சிக்கலாகிவிடும் என போலீசார் தெரிவித்தனர். விஜய் தப்பி ஓடியதாக அரசு தரப்பு கூறியது முற்றிலும் தவறானது'' என தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விதிவிலக்கான வழக்குகளுக்கு மட்டுமே சிபிஐ விசாரணை தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. சிறுவனின் தந்தை தரப்பில், கூட்ட நெரிசலுக்கு காவல்துறையின் தோல்வியே காரணம். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஜனவரி மாதம் அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இடையூறாக இருக்கும் என்பதால் தான் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை விளக்கம் கூறியது. அந்த இடத்தில் தான் விஜய் கூட்டத்துக்கு செப்டம்பரில் அனுமதி தரப்பட்டது. கரூர் பிரசாரத்தில் ரவுடிகள் நுழைந்தனர். காவல்துறை விசாரணையில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை இல்லை. உண்மை வெளிவர சிபிஐ விசாரணை தேவை என வாதிடப்பட்டது. நீதிபதிகள் கூறுகையில், '' சென்னை உயர்நீதிமன்ற வரம்புக்குள் வராத வழக்கை விசாரித்தது ஏன்?. ஒரு கோரிக்கையை முன்வைத்தால் மற்றொரு கோரிக்கை மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. '' எனக் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Srinivasan Narasimhan
அக் 10, 2025 22:21

அரசியல் காழ்புணர்ச்சி கழகம்


Murugesan
அக் 10, 2025 21:06

திமுக நீதிபதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வைத்த ஆப்பு, கொலைகார தமிழக திராவிட அரசாங்க ஊழியர் விசாரிக்ககூடாது


nepo abi
அக் 10, 2025 20:48

செந்தில் குமாருக்கு செ.அடி


Mr Krish Tamilnadu
அக் 10, 2025 19:23

உச்சநீதிமன்றம் கையில் வழக்கு என்பது இரண்டு வகையில் நன்மை. சமூக விரோதிகள் தொடர்பு என்றால் சிபிஜ விசாரணை மூலம் மட்டுமே கண்டு அறிய முடியும். அடுத்து, தவெக வுக்கும் பூச்சாண்டி பயமில்லை. இன்னும் 6 மாதங்களுக்குள் ஐகோர்ட் என்றால் பலமுறை விசாரணை, தீர்ப்பு என அவர்கள் நகர்வுகளை பாதிக்கும். இப்போது விபத்தா?. விபரீத செயலா ? என்பதற்கு விசாரணை முடியும் வரை காத்து இருக்கலாம்.இது சம்பந்தப்பட்ட தவெக நபர்கள் அனைவரும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு எந்த நேரமும் நல்குகிறோம் என கூறி ஜாமீன் வாங்கலாம்.


திகழ்ஓவியன்
அக் 10, 2025 19:18

மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒரு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது.


srinivasan
அக் 10, 2025 20:10

நீங்களே அடிப்பிங்க அப்பறம் நீங்களே திருடவும் செய்வீங்க கேட்டா நீங்களே விசாரிச்சு நீங்களே தீர்ப்பும் சொல்லுவீங்க.


Murugesan
அக் 10, 2025 21:03

கொலைகார்களிடமே ஆட்சி


Kjp
அக் 10, 2025 22:48

உச்ச நீதிமன்றம் சொன்னதை நன்றாக படித்துப் பாருங்கள்.பிள்ளையை பறிகொடுத்த தகப்பனே சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார்.


D.Ambujavalli
அக் 10, 2025 18:29

இந்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து உதயநிதி, இன்னும் சில கட்சி அரைகுறைகள் ஏதாவது உணருவார்கள் கோர்ட் அவமதிப்பு சேர்ந்துகொள்ளும்


sankaranarayanan
அக் 10, 2025 18:20

நீதிபதிகள் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற வரம்புக்குள் வராத வழக்கை விசாரித்தது ஏன்?. ஒரு கோரிக்கையை முன்வைத்தால் மற்றொரு கோரிக்கை மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது இது எதற்கு இந்த சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மிகவும் அவசியமா தன்னுடைய ஏரியாவிலேயே இல்லாத வழக்கை எடுக்கும்படி திராவிட மாடல் அரசின் நிர்ப்பந்தம் இதற்கு காரணம் அங்கேயும் அரசியலா என்பது நிறுப்பனமாகிவிட்டது உண்மை வெளிவர மத்திய சி.பி.யையைத்தான் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஆணை இடவேண்டும் அப்போதுதான் முழு உண்மை வெளிவரும்


GMM
அக் 10, 2025 17:52

1.சென்னை உயர்நீதிமன்ற வரம்புக்குள் வராத வழக்கு .ஒரு கோரிக்கையை முன்வைத்தால் மற்றொரு கோரிக்கை மீது உயர்நீதிமன்றம் உத்தரவு. செல்வாக்கு .2.சமூக விரோதிகளின் தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும். 3.விதிவிலக்கான வழக்குகளுக்கு மட்டுமே சிபிஐ விசாரணை தேவைப்படும் என குற்றச்சாட்டில் உள்ள பிரதிவாதி தமிழகம் கூற கூடாது. 4.சிபிஐ விசாரணையை தீர்மானிப்பது மத்திய உள்துறை அல்லது நீதிமன்றம். சமூக விரோதிகள் தேசம் முழுவதும் செல்ல முடியும். மாநில போலீஸ் எல்லையில் வராது. சிபிஐ விசாரணை தேவை.


thangam
அக் 10, 2025 17:15

திராவிடம் சிக்கும் கண்டிப்பாக நீதித்துற இடம்


Sivaram
அக் 10, 2025 17:07

கவாய் ஏன்யா உனக்கு ஆதரவா போன வாரம் அறிக்கை விட்டேன் , இப்போ இப்படி பண்ணி விட்டாயே , சமூக நீதிக்காக போராடலாம்னு பார்த்தா , விட மாட்டீங்க போல இருக்கே , என்ன உடன்பிறப்பே இறங்கி அடிக்கலாமா என் கூட வருவியா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை