உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அடுத்து செய்ய வேண்டியவை பற்றி இருவரும் ஆலோசித்தனர்.காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் உள்ள பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இச்சூழ்நிலையில், டில்லி வந்துள்ள காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா , பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, வரும் நாட்களில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !