உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று காஷ்மீர் செல்கிறார் ராணுவ தளபதி

இன்று காஷ்மீர் செல்கிறார் ராணுவ தளபதி

புதுடில்லி: பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி இன்று(ஏப்ரல் 25) ஸ்ரீநகர் செல்கிறார்.காஷ்மீரில் நடந்த தாக்குதல் காரணமாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்.இந்நிலையில், ராணுவ தளபதி விக்ரம் மிஸ்ரி இன்று ஸ்ரீநகர் சென்று பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார். அவரிடம் அங்குள்ள ராணுவ உயர் அதிகாரிகள், காஷ்மீரிலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உள்ளார். இந்த கூட்டத்தில் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் கமாண்டர்கள் உள்ளிட்ட ராணுவத்தில் உள்ள பல பிரிவுகளின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M.S Balamurugan
ஏப் 24, 2025 20:40

பொறுமையா போங்க பாஸ் என்ன அவசரம் ... சம்பவம் நடந்து ரெண்டு நாள் தான ஆகுது.


vivek
ஏப் 25, 2025 07:52

டாஸ்மாக் சில்லறை


Karthik
ஏப் 24, 2025 19:33

சும்மா இறங்கி - அடிச்சி ஆடுங்க தளபதி.. நாங்க இருக்கோம். WE SUPPORT INDIAN ARMY.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 24, 2025 18:48

மணிப்பூர், இப்போ காஷ்மீரும் அவுட் ஆப் கண்ட்ரோலாகிடுச்சா?


Venkataraman Subramania
ஏப் 24, 2025 20:02

First you should be taken into custody and book under National Security act with non bailable for atleast 20 years


Sakthi
ஏப் 24, 2025 20:11

மர்ம கும்பல் உலாவுகிறது ஹிந்து போர்வையில்


N Sasikumar Yadhav
ஏப் 24, 2025 21:57

உங்களுக்கு ஜோத்பூர் ஸ்பெஷல் ஆட்டு பிரியாணி கிடைக்காதென்பதால் பயம் வந்துவிட்டது போல தெரிகிறது


Kasimani Baskaran
ஏப் 25, 2025 03:56

இதெல்லாம் விளைந்து களம் சேராது..


vivek
ஏப் 25, 2025 07:53

உனக்கு பேரு வச்சவர்.............


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை