உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேதார்நாத் யாத்திரையில் நிலச்சரிவில் சிக்கிய யாத்ரீகர்கள் 100 பேர்; பத்திரமாக மீட்டது மீட்புபடை

கேதார்நாத் யாத்திரையில் நிலச்சரிவில் சிக்கிய யாத்ரீகர்கள் 100 பேர்; பத்திரமாக மீட்டது மீட்புபடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேதார்நாத் யாத்திரையின் போது நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 100 பேரை பத்திரமாக மீட்ட மீட்பு படையினரை பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டி உள்ளனர்.கடந்த மே 2ம் தேதி முதல் கேதார்நாத் புனித யாத்திரை பயணம் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் புனித பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் யாத்ரீகர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுப்பணி துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் 24 மணி நேரமும் சிரமம் பார்க்காமல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த சூழலில், சோன்பிரயாக் அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், சோன்பிரயாக் பகுதியில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 100 பேரை பத்திரமாக மீட்பு படையினர் மீட்டனர். யாத்ரீகர்கள் 100 பேரும் நலமாக இருக்கின்றனர் என்பதை துணை கமிஷனர் ஆஷிஷ் திம்ரி உறுதி செய்தார்.தக்க நேரத்தில், சாதுர்யமாக செயல்பட்ட மீட்பு படையினரை பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். டேராடூன், சம்பாவத் மற்றும் நைனிடால் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரிக்கையை தொடர்ந்து, அரசாங்கமும், மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Selvaraj Thiroomal
ஜூலை 26, 2025 14:37

புனித யாத்திரைகள், வாழ்க்கையில் ஒரேயொரு முறை செல்ல வேண்டிய தலங்களை சுற்றுலா இடங்களாக, மாற்றியதில் சுற்றுசூழல் நிபுணர்களுக்கு மிகுந்த வருத்தம், ஏமாற்றம். குறிப்பாக இமயமலை சார்ந்த பகுதிகளின் புவியியல் கட்டமைப்பு பாரங்களை சுமக்க ஏற்றதில்லை. பல விபத்துகள் நடந்தும் பக்தி சுற்றுலா மக்களுக்கும் இயற்கைக்கும் தீமையே செய்தும், அரசு திருந்த போவதில்லை.


sundarsvpr
ஜூலை 26, 2025 14:32

வீதியில் நிதானமாய் நடந்து செல்கிறோம். கீழே விழுந்து விடுகிறோம் எழுந்து மீண்டும் நடக்கிறோம். ஆனால் கோடியில் ஒருவர் விழந்தவுடன் மரணம் அடைகிறார். இரண்டும் விதி. கேதார்நாத் யாத்திரையில் 100 நபர் பிழைத்தது விதி. யாத்திரையில் இழப்பு ஏற்பட்டு இருந்தால் அதுவும் விதி. இரண்டு யாத்திரைகளிலும் ராணுவம் உதவும். என் கடன் பணி செய்து கிடப்பது. இதனை ராணுவம் செய்துள்ளது.


சமீபத்திய செய்தி