உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விசாரணையின்றி ஒருவரை நீண்டகாலம் சிறையில் வைத்திருப்பது தவறு: கோர்ட்

விசாரணையின்றி ஒருவரை நீண்டகாலம் சிறையில் வைத்திருப்பது தவறு: கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'வழக்கு விசாரணை இன்றி ஒருவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது சரியில்லை' என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டது.உத்தர பிரதேசத்தில் போதைப் பொருள் ஒழிப்பு போலீசில் 2019ல் சிக்கிய ஒருவர் ஜாமின் கோரி கடந்த ஆண்டு மார்ச் மாதம் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, தள்ளுபடியானது.இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'எவ்வித விசாரணையும் இன்றி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். என்னுடன் கைதானவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில்லை என கூறி, எனக்கு ஜாமின் மறுக்கப்படுகிறது' என கூறி இருந்தார்.அதை எதிர்த்து, அரசு தரப்பில் வாதிடும் போது, 'இவருடன் சேர்ந்து கைதானவர், ஜாமினில் வெளியே சென்ற பின், விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். விசாரணை விரைவில் துவங்க உள்ளது. எனவே, இவரை ஜாமினில் விடக் கூடாது' என தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர், குற்றம்சாட்டப்பட்ட அந்த உ.பி., நபரை, ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டனர்.

மேலும் அவர்கள் உத்தரவிட்டதாவது:

வழக்கு விசாரணை ஏதுமின்றி நீண்ட காலம் சிறையில் ஒருவரை வைத்திருப்பது தவறு. அவருடன் கைதானவர், விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கிறார் என்பதற்காக, இவரை பிடித்து வைத்திருக்கக் கூடாது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பவரின் ஜாமின் உத்தரவை ரத்து செய்யும் அதிகாரம் அரசிடம் உள்ளது. எனவே, மனுதாரரை நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது நியாயமானதல்ல. எனவே, அவருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Gopalakrishnan Thiagarajan
ஏப் 25, 2025 14:03

அந்த 35 கோடிக்கு உச்சநீதி மன்றதிடமிருந்து பதிலே காணுமே


theruvasagan
ஏப் 25, 2025 11:10

வழக்கு விசாரணைக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு தராவிட்டால் அந்த நீதிபதியின் சம்பளத்தை நிறுத்த வேண்டும் என்கிற விதியை உருவாக்க.வேண்டு்ம்


Kalyanaraman
ஏப் 25, 2025 08:28

அது சரி. நீண்ட காலமாக விசாரணை என்ற பெயரில் வழக்கு முடிவற்ற நிலையில் ஜவ்வாக போய்க்கொண்டிருப்பதற்கு நீதிபதிகள் ஏதாவது முடிவு எடுக்க வேண்டும்.


VENKATASUBRAMANIAN
ஏப் 25, 2025 08:22

இந்த ஜாமீன் இருப்பதால் எல்லோருக்கும் துணிச்சல் வந்து விடுகிறது. இதன் முக்கியத்துவம் போய் விட்டது. இதை நீதிமன்றங்கள் உணரவேண்டும்.


Sri Sri
ஏப் 25, 2025 08:17

தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் நீதிமன்றத்தால் காவு கொடுக்க படுகிறது


புஷ்கர்சிங்
ஏப் 25, 2025 08:16

கைது செய்த மூணு மாசத்துக்குள் விசாரிச்சு தீர்ப்பு. இல்லைன்னா விடுதலைன்னு சட்டம் போடணும். சட்டம், ஒழுங்கு ரெண்டுமே திராபையா இருக்கு இந்தியாவுலே.


Dharmavaan
ஏப் 25, 2025 07:54

எல்லா குற்றங்களும் அதிகமாக காரணமே இந்த கோர்ட்டுகள்தான்.. கேவலம் சமுதாய நலனை விட குற்றவாளி உரிமையை பார்ப்பது நாட்டுக்கு கேடு


Sri sri
ஏப் 25, 2025 08:25

குற்றவாளிக்கு விருந்து ஏக தடபுடல்


மாரன்
ஏப் 25, 2025 06:21

இவனுகளும் நீதியும் குப்பைக


மீனவ நண்பன்
ஏப் 25, 2025 04:52

நீதிமான் விசாரணை வளையத்தில் இருக்கும்போதே பதவியில் நீடிக்கிறார் .. விசாரணைக்கு கால நிர்ணயம் இருப்பதாக தெரியவில்லை ..


முக்கிய வீடியோ