உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலுக்கு கார், வீடு கிடையாதாம்: வேட்புமனுவில் தகவல்

கெஜ்ரிவாலுக்கு கார், வீடு கிடையாதாம்: வேட்புமனுவில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு ரூ.1.73 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.டில்லி சட்டசபை தேர்தல் பிப்.,5ல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. இந்நிலையில், புதுடில்லி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளதாவது,தனக்கு வங்கிக் கணக்கில் வைப்புத் தொகை உட்பட ரூ.3.46 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன. கையிருப்பாக ரூ. 50 ஆயிரம், 2022-23ல் ஆண்டு வருமானம், ரூ.1.67 லட்சத்தில் இருந்து 2023-2024ல் ரூ.7.2 லட்சமாக உயர்ந்துள்ளது. காஜியாபாத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் ஒரு பிளாட் என ரூ.1.73 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்து உள்ளது.சொந்தமாக கார் தவிர டிபாசிட், தங்கம், வெள்ளி, கேஸ் சர்பிகேட் மிட்சுவல் இன்வஸ்மெண்ட், காப்பீடு போன்றவை கிடையாது. எந்த கிரிமினல் குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

S.V.Srinivasan
ஜன 17, 2025 08:21

அண்ணா ஹசாரேக்கே அல்வா கொடுத்த உத்தம புத்திரன்.


S.V.Srinivasan
ஜன 17, 2025 08:17

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது இதுதான். கடந்த ஓரு வருஷமா சிறையில் இருந்தது எதுக்காக ? இந்தியா சுதந்திரத்திற்க்காகவா .


Barakat Ali
ஜன 16, 2025 11:53

எங்க ஷேஹ்ஜதி இடம் கூட ஹம்மர் கார் இருக்குதே ????


visu
ஜன 16, 2025 11:12

அந்த பிளாட் எப்ப வாங்கியது


ஆரூர் ரங்
ஜன 16, 2025 10:43

நம்பலாம். நுழைவுத் தேர்வே எழுதாமல் ஐஐடி யில் இடம் வாங்கியவர். நம்பர் இல்லாமல் கார், வீடு வாங்கியிருப்பார். ஸ்டாலின் கூட சைக்கிள் மட்டுமே வைத்திருக்கும் ஏழை. பெரும்பாலும் கால்நடை ( பயிற்சி) யாக தான் செல்கிறாராம்.


sankaranarayanan
ஜன 16, 2025 10:17

பாவம் சொத்து பொத்து இல்லாத மேபெறும் அரசியல் கோமாளி ஆனால் அவர் அடுத்தவர்கள் மக்களின் சொத்தில்தான் வாழ்வாராம் வாழ்ந்தே காட்டியுள்ளாராம் பல கோடி கணக்கில் கட்டிய அரசாங்க கணக்கில் பணத்தில் செலவழித்த பங்களாவில் வாழ்ந்தாராமே அப்படியா


sribalajitraders
ஜன 16, 2025 10:04

கார் வீடு இல்லயாம் ,இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குது


Shekar
ஜன 16, 2025 09:43

எங்க விடியல் தலைவருக்குகூட அப்படிதான், அப்போ 2 கோடி மதிப்புள்ள கார்ல போறார் அப்படின்னு சில அற்ப பதர்கள் கேட்கிறார்கள். அது அவரது அயராது உழைப்பை பார்த்து, சிவப்பு அரக்கன் இன்னும் வேகமாக உழைப்பதற்கு கொடுத்தது.


HoneyBee
ஜன 16, 2025 09:38

திராவிட மாடலை ஃபாலோ செய்கிறார் இந்த ஏமாற்று வித்தைகாரன்


GMM
ஜன 16, 2025 08:42

கெஜ்ரிவாலுக்கு வீடு இல்லை. வீதி கொண்ட பல ஊர் இருக்கும்? கார் இல்லை. கப்பல், விமானம் இருக்கும்? வேட்பு மனுவில் என்ன இருக்கு என்று கேட்க வேண்டும். தேர்தல் ஆணையம் வீடு, மனை இருக்கா என்று கேட்டால் இல்லை என்ற உண்மையை தான் சொல்வர். காங்கிரஸ் , திராவிட, ஆம் ஆத்மி ஊழல் சொத்து சேர்க்கவில்லை என்றால், உறுப்பினர் கூட ஆக முடியாது. ஊழல் சொத்து வேட்பு மனுவில் தெரிவிக்க முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை