உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சுற்றுலா பயணிகளை கவரும் கேரளா!

 சுற்றுலா பயணிகளை கவரும் கேரளா!

மூணாறு: கேரள மாநிலம் பாதுகாப்பு, ரம்யமான சுற்றுச்சூழல் ஆகியவற்றை கொண்ட உலகளாவிய சுற்றுலா ' ஹாட்ஸ் பாட்' ஆக மாறி வருகிறது. 2025 ஜன. 1 - செப்.30 வரையிலான ஒன்பது மாதங்களில் உள்நாட்டைச் சேர்ந்த 1,80,29,553, வெளிநாடுகளைச் சேர்ந்த 5,67,117 என மொத்தம் 1,85,96,670 பயணிகள் வருகை தந்து சாதனையை ஏற்படுத்தியது. இதே கால அளவில் 2024யை விட 13.06 இது சதவீதம் அதிகமாகும். ரோடுகளின் கட்டமைப்புகள் சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு உள்ளது. மத்திய அரசின் ரூ.378 கோடி நிதியில் இருவழி சாலையாக அமைக்கப்பட்ட ரோடு, பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு இடையே செல்லும் அழகை ரசிக்க என பயணிகள் வந்து செல்கின்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தியாகு
ஜன 02, 2026 08:20

கேரளாவில் முதல்வர் கூட 10 லட்சம் ஊழல் செய்ய லஞ்சம் வாங்க பயப்படுவார். டுமிழ்நாட்டில் கட்டுமர திருட்டு திமுகவின் வார்டு மெம்பர் கூட அசால்ட்டாக 10 லட்சத்தை ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் ஆட்டையை போடுவான்.


தியாகு
ஜன 02, 2026 07:37

நல்லவேளை கேரளா சேட்டன்களின் சொத்தாக இருக்கிறது. இந்த ரம்யமான மலைகளும் சூழலும் டுமிழ்நாட்டில் இருந்திருந்தால் திமுகவினரின் சொத்தாக மாறியிருக்கும்.


Raja k
ஜன 02, 2026 07:14

இயற்கையை அழிக்காமல், சுரண்டாமல், நீர் நிலைகள் சீர்கெடாமல் பாதுகாக்கின்றனர் ஒவ்வொரு மலையாளியும், குப்பைகூட அங்கே போட மாட்டார்கள் தமிழகத்துக்குதான் பார்சலாக வரும், கேரளாவில் திரும்பிய இடமெல்லாம் பாறையாக இருந்தாலும் சிறு சல்லிகற்கள் முதற்கொண்டு, ஏன் மண்கூட தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்துதான் போகும், உலகெங்கும் சந்துபொந்தெல்லாம் கடை வைத்தும், வொயிட் காலர் வேலைகள் செய்தும் ஈட்டும் பணத்தை தன் மாநிலம் செழிக்க கொண்டுவந்து சேர்கிறார்கள், இப்படி எத்தனையோ சொல்லி போகலாம், கேரள மக்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் நிறையவே உண்டு, உண்மையில் கேரளா ஒரு தனி உலகம்தான், கேரளாவிற்கு எல்லா விசயங்களிலும் நேர் எதிர்னது தமிழகம்,


Kasimani Baskaran
ஜன 02, 2026 03:59

திராவிடர்கள் போல அச்சன்கள் ககக செய்வதில்லை போலும்.... தவிரவும் அங்கு எதிர்க்கட்சிகள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி ஆளும் கட்சியை கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.. தமிழகத்தில் ஆத்தா தீமக்காவின் நுண்ணறிவு தாத்தா தீம்க்காவின் முக்கிய அமைச்சர்களாக பரிமளிக்கிறார்கள்.. ஆகவே கமிஷன் என்றால் பங்காளிகள் ஒன்று சேர்ந்து உழைப்பர்கள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை