உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாபலி தான் தீர்வு தரணும்; நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லும் கேரளா; அபாய மணி அடிக்கும் வல்லுநர்கள்!

மஹாபலி தான் தீர்வு தரணும்; நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லும் கேரளா; அபாய மணி அடிக்கும் வல்லுநர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகைக்காக கேரளா அரசு ரூ.4,800 கோடி கடன் பெற்றுள்ளது. மாநில அரசின் இத்தகைய நிலை, வரும் காலத்தில் பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கடன் வரம்பு

கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் கேரளா அரசு, இந்த நிதியாண்டில் ரூ.37,512 கோடி மட்டுமே கடன் பெற முடியும் என்று மத்திய அரசு வரம்பு நிர்ணயம் செய்துள்ளது. இதில், டிசம்பர் மாதம் வரை தேவைப்படும் செலவுகளுக்காக ரூ.21,253 கோடி மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் இப்போது ரூ.700 கோடி மட்டுமே பயன்படுத்தப்படாமல் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் ஓணம் பண்டிகை வந்திருக்கிறது.

ரூ.4,800கோடி

இந்நிலையில் இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) மேற்கொள்ள வேண்டிய முக்கிய செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.16,257 கோடியில் இருந்து ரூ.4,800 கோடியை அரசு நிர்வாகம் கடன் பெற்றுள்ளது. ஓணம் செலவினங்களுக்காக இந்த தொகை பெறப்பட்டுள்ளது. இது போதாது என்று கூட்டுறவு வங்கிகளிடம் இருந்தும் ரூ1,000 கோடி கடன் பெற்று இருக்கிறது. இதற்கு 9 சதவீதம் வட்டியும் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

பொருளாதாரம்

தொடரும் மாநில அரசின் இதுபோன்ற கடன் நடவடிக்கைகள் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறி உள்ளதாவது; நிதி நெருக்கடி உச்சக்கட்டமாக இருக்கும் தருணத்தில் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓணம் போனசாக 2 மாதம் ஓய்வூதியத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி தலா ஒருவருக்கு ரூ.3,200 வழங்கப்படும். இந்த தொகை தற்போது வழங்கப்பட்டு வரும் ஒரு மாத ஓய்வூதியத்தை விட கூடுதலாகும்.

பண்டிகை முன்பணம்

மேலும், அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ஓணம் போனஸ் ரூ.4000 வழங்கப்படும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1000 வழங்கப்படும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பண்டிகை முன் பணம் ரூ.20,000 அளிக்கப்படும். இதுபோல, பகுதிநேர ஊழியர்களும் ரூ.6,000 பெற தகுதியானவர்களாக உள்ளனர்.

நிதி நிலைமை

இப்படி ஓணம் போனஸ் தொகைக்கே கடன் பெற்றுள்ள மாநில அரசு, வரும் நாட்களில் நிதி நிலைமையை எவ்வாறு கையாளப் போகிறது என்பது சவாலான விஷயம் தான் என்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

masetung
செப் 10, 2024 04:11

கொச்சின் நகரில் 10000 பேருக்கு வேலை கொடுத்த கிட்ஸ் என்ற நிறுவனம் ஏன் வேறு மாநிலத்திற்கு போயிற்று.? இனியும் கேரள அரசியல்வாதிகள் திருந்தலைன்னா அதோ கதிதான்.


அப்பாவி
செப் 07, 2024 19:01

சின்னப்.பையன் காலால மூணு அடி தானம் கேட்டு, எடுத்துக்கோன்னவுடன் பெரிய ஆளாயி ஏமாத்துவாராம். மகாபலி நியாயஸ்தன். ஆனாலும் கொடுத்த வாக்கை காப்பாத்துனான். ஏமாத்துனது மகாபலி அல்ல.


Rajarajan
செப் 07, 2024 15:44

கவலைப்படாதீங்க பாஸ். உங்க நிலைமைக்கு ஈடு கொடுக்க, நாங்களும் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கோம். கூடிய சீக்கிரம், நம்ம ரெண்டு பேரும், ஒருத்தரை ஒருத்தர் ஓவெர்டேக் செஞ்சிருவோம்.


கண்ணன்
செப் 07, 2024 13:54

இப்போதாவது கேரள மக்களுக்கு கம்யூக்களின்அரசியல் மற்றும் பொருளாதார அறிவினைப் புரிந்தால் சரி


N Srinivasan
செப் 07, 2024 13:38

பல மாநிலங்களின் நிதி நிலைமையை பார்க்கும்போது ஒரு நல்ல விஷயம் நடந்து உள்ளது. GST மட்டும் கொண்டு வரவில்லை என்றால் ஒவ்வொரு மாநிலமும் அவர்களுடைய தேவைக்கு VAT வரியை உயர்த்தி விளையாடி இருப்பார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 07, 2024 12:34

மனிதத்தவறுகளால், பேராசையால் நிகழ்ந்தது வயநாடு அவலம் .... அதற்காக பதின்மூன்றே வயதான தமிழக சிறுமி பரதம் ஆடி நிதி திரட்ட உதவினாள் .... மூழ்கத் துவங்கியுள்ள கேரளாவுக்கு உதவலாமே ????


Sivagiri
செப் 07, 2024 11:59

அரசாங்கத்தில் அனைத்து செலவுகள் , ஒப்பந்தங்கள் , அனைத்திலும் - ஒன்றுக்கு மூணு மடங்கா பணத்தை செலவு செஞ்சா மாதிரி கணக்கு காமிச்சு , முக்கால் வாசியை கவுன்சிலர் சேர்மன் எம் ல் ஏ , எம்பி , மந்திரி , மற்றும் துறை ஆபீசர் , அலுவலர்கள் , ஒப்பந்த ரர்கள் என்று பிரித்து கொள்ளை அடித்து கொண்டால் , அரசுக்கு என்ன மீதம் இருக்கும் மக்களுக்கு என்ன கிடைக்கும் ? . . . கடனும் - வட்டியும் , வரி உயர்வு , விலைவாசி உயர்வு , இவ்வளவும் காசு வாங்கிட்டு ஒட்டு போட்ட மக்களின் தலையில்தான் விழும் . .


Svs Yaadum oore
செப் 07, 2024 11:03

முக்கிய செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.16,257 கோடியில் இருந்து , ரூ.4,800 கோடி ஓணம் செலவினங்களுக்காக பெறப்பட்டுள்ளதாம் ....ஓணம் போனஸ் தொகையாம் ...சமத்துவ பொங்கல் மாதிரி ஹிந்து மத பண்டிகையை சமத்துவ ஓணம் என்று மாற்றி கொண்டாடுவானுங்க ..இதற்கு விடியல் மதப்பிச்சார்பின்மையாக மலையாளத்தில் வாழ்த்து ....கேரளாவில் எந்த தொழில் நிறுவனமும் வராது .....எல்லாம் மத சார்பற்ற கம்யூனிஸ்ட் ....அரசாங்கம் திவால் ...


KRISHNAN R
செப் 07, 2024 10:55

Keynesian தியரி அடிப்படையில் டெபிசிட் பட்ஜெட் போட்டால் நல்லது. ஆனால்... அளவுக்கு அதிகமாக இருக்கும் போது எதிர் விளைவு அதிகம் இருக்கும். .. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் எல்லாம் இதை காற்றில் விட்டு விட்டன . மக்கள் அம்போ


vbs manian
செப் 07, 2024 10:29

திவால் நிலைமையே வந்து சேரும். வறட்டு சித்தாந்தம் பேசி மக்களை பாலைவனத்துக்கு அனுப்புவார்கள்.