உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு நிதியை பயன்படுத்துவதில் கேரள அரசு தோல்வி; பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அரசு நிதியை பயன்படுத்துவதில் கேரள அரசு தோல்வி; பிரகாஷ் ஜவடேகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு மத்திய அரசின் நிதியை பயன்படுத்த கேரள அரசு தவறிவிட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.500 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே ரூ.700 கோடி பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. முதல்வர் நிவாரண நிதிக்கு மக்கள் வழங்கிய நிதியை உபயோகப்படுத்தவில்லை. இது கேரளாவை ஆளும் இடதுசாரிகள் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் போலி பிரசாரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றமே கண்டனத்தை தெரிவித்துள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் கூறுகையில், 'மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருக்கும் தொகையை பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகளும், விதிகளும் உள்ளன. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள, இந்த நிதி போதுமானதல்ல,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
டிச 08, 2024 21:16

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாரும், தொண்டு நிறுவனங்களுமே உணவு உடை என எல்லா உதவிகளையும் செய்துவிட்டன. இனிமேல் யாரும் உதவிப் பொருட்களை அனுப்பவேண்டாம் என்று கூட வேண்டுகோள் விடுத்தனர். ஆக கம்யூனிஸ்டு அரசு செய்தது சிறிதே. டோலர்கள் விழுங்கியதே அதிகம். இப்போ கூடுதலாகக் கேட்பது டோலர்கள் நலத்துக்காக மட்டுமே.


சாண்டில்யன்
டிச 08, 2024 20:18

"இது மனிதகுலத்தின் நீண்ட வரலாறு மற்றும் விலங்கு வகைகளும் கூட ஒத்துழைக்க மற்றும் மேம்படுத்தக் கற்றுக்கொண்டவர்கள் மிகவும் திறம்பட வெற்றி பெற்றுள்ளனர்." - சார்லஸ் டார்வின். அடுத்தவரை நொட்டை சொல்லியே பிழைப்பது நல்ல மேலாண்மையில்லை. அதனாலேயே நாடாளு மன்றத்தில்,மகாராஷ்டிராவில் நிற்க இரண்டு வாக்கிங் ஸ்டிக்


Ramesh Sargam
டிச 08, 2024 20:17

தமிழக அரசு என்றைக்கு முறையாக பயன்படுத்தியது? அதை ஏன் கூறவில்லை இவர்?


RAMAKRISHNAN NATESAN
டிச 08, 2024 20:02

நிதியை கரெக்டா பயன்படுத்துறது டுமீலு நாட்டு அரசுதான் ன்னு கூட ஒரு வாக்கியம் சொல்லியிருக்கலாம் ....


சாண்டில்யன்
டிச 08, 2024 22:28

இப்போ டுமீலு நாடுன்னா மத்திய பிரதேஷ் பிஹார் ஜார்கண்ட்தான் பள்ளிக்கு கூட சிறுவனும் சுடறான் நக்ஸலைட்டும் சுடறான் ஆனா அரசு நகர்ப்புற நக்ஸலைட்டுகளை தேடியலைகிறது


சமீபத்திய செய்தி