உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்று மணல் அள்ள கேரள அரசு அனுமதி!

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்று மணல் அள்ள கேரள அரசு அனுமதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஆற்று மணல் அள்ளுவதை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை அங்கீகரித்து அம்மாநில வருவாய்த்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.கேரளாவில் ஆறுகளில் இருந்து மணல் எடுப்பது வரம்பை மீறியதால், 2016ம் ஆண்டு மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த முடிவு, சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆற்று மணல் அள்ளுவதை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை அங்கீகரித்து அம்மாநில வருவாய்த்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் ஆற்று மணலை சட்டப்பூர்வமாகவும் அறிவியல் ரீதியாகவும் அள்ளுவது குறித்து, உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.* ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆறுகளுக்கு ஒரு மாவட்ட ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதிக்காக விண்ணப்பிக்க மாவட்ட ஆய்வு அறிக்கை அடிப்படையாக அமையும். * இந்த அறிக்கை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் புதுப்பிக்கப்பட வேண்டும்.2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை கேரளாவில் நடத்தப்பட்ட மணல் தணிக்கையிலிருந்து உள்ளீடுகளைக் கொண்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த காலகட்டத்தில், கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 32 ஆறுகளில் மணல் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் 16 ஆறுகளில் மணல்கள் அள்ளலாம் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், 15 ஆறுகளில், மணல் சுரங்கம் மூன்று ஆண்டுகளுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட உள்ள ஆறுகள் பட்டியல்:* குளத்துப்புழா * அச்சன்கோவில் * பம்பா * மணிமாலா * பெரியாறு* மூவாட்டுப்புழா * பாரதப்புழா * கடலுண்டி * சாலியார் * பெரும்பா * வாழப்பட்டினம் * ஸ்ரீ கண்டபுரம் * மாகி * உப்பாலா * மாக்ரல்* சிரியா யல்கானா* சந்திரகிரி

தடை செய்யப்பட்டுள்ள 15 ஆறுகள் விபரம் பின்வருமாறு:

* நெய்யாறு (திருவனந்தபுரம்),* கரமனா (திருவனந்தபுரம்),* வாமனபுரம் (திருவனந்தபுரம்),* இத்திக்கரா (கொல்லம்),* கல்லாடா (கொல்லம்), * மீனச்சில் (கோட்டயம்),* கருவண்ணூர் (திருச்சூர்),* சாலக்குசி (திருச்சூர்), * கிரீச்சூர் (திருச்சூர்),* கேச்சேரி (திருச்சூர்) * கபனி (வயநாடு), * குட்டியடி (கோழிக்கோடு),* வள்ளித்தோடு (கண்ணூர்), * அஞ்சரகண்டி (கண்ணூர்),* சந்திரகிரி (காசர்கோடு).மேலும் 12 ஆறுகளில் மணல்களை பரிசோதனை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதன் பின்னர் தான் இந்த ஆறுகளில் மணல் அள்ளலாமா என்பது குறித்து வருவாய்த்துறை முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
மே 22, 2025 14:23

மகிழ்ச்சி வெள்ளத்தில்.


SARAVANA GANESAN A
மே 22, 2025 13:52

அதாவது தமிழ்நாட்டுக்கு அருகில் எல்லையை ஒட்டி உள்ள அதனால் தமிழகம் பலன் அடையும் என்ற நிலையில் ள்ள ஆறுகளில் மணல் அள்ள அனுமதி. அதனால் அதிகம் பாதிக்கப்படுகிவது தமிழ்நாடுதான் .கேரளாவுக்கு உள்ளே இல்ல ஆறுகளில் தடை தொடர்கிறது. என்ன ஒரு தெளிவு


Minimole P C
மே 22, 2025 10:26

It is good news to TN people and builders. Hereafter the sand mafia in TN cannot sell sand at high cost and loot public money at mega level.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை