உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமியின் கருக்கலைப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி

சிறுமியின் கருக்கலைப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: கேரளாவில், காதலனால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி கருவுற்ற, 16 வயது சிறுமியின் கருவை கலைக்க, அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுமி, தன் காதலனால் பல முறை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். அவர் கருவுற்று 26 வாரங்களுக்கு மேலான நிலையில் அது பற்றி அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது.எனவே, கருகலைப்புக்கு அனுமதிகோரி சிறுமியின் தாய், கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார்.மனுவை விசாரித்த தனி நீதிபதி, 'வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியில் பிரச்னை எதுவும் இல்லை' எனக்கூறி கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்க மறுத்தார். இதை எதிர்த்து சிறுமியின் தாய் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு:சிறுமி குழந்தையை பிரசவித்தால், அவரது மனநலம் கடுமையாக பாதிக்கப்படும் என, மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. கருக்கலைப்புக்கு அனுமதி மறுத்த தனி நீதிபதி, சிறுமியின் மனநலனை பரிசோதிக்க பரிந்துரைக்கவில்லை. அது துரதிர்ஷ்டவசமானது.சிறுமியின் மனநலனை கருத்தில் வைத்து கருகலைப்புக்கு அனுமதி அளிக்கிறோம்.கருகலைப்பின் போது சிசு உயிருடன் பிறந்தால் அதன் உயிரை காக்க வேண்டிய பொறுப்பு மருத்துவக் குழுவுக்கு உள்ளது. குழந்தையை வளர்க்க சிறுமியின் குடும்பத்தினர் விரும்பவில்லை எனில், குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நம் நாட்டில், 24 வாரங்கள் வரை கருவை கலைக்க அனுமதி உண்டு. அதற்கு மேற்பட்ட காலமான கரு என்றால், அதை கலைப்பது குறித்து வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் சட்டப்பூர்வமான அனுமதி பெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

J.Isaac
நவ 10, 2024 17:06

இன்னும் தைரியமாக பாலியல் குற்றங்கள் அதிகமாகும்.


Kasimani Baskaran
நவ 10, 2024 07:18

கல்வியில் சிறந்த கேரளத்தில் இப்படி ஒரு சோகம். பாக்கெட்டில் இன்டர்நெட் இருக்கும் பொழுது மாணவர்களுக்கு இளம் வயதிலேயே போதனைகள் கிடைப்பது அவசியம்.


நிக்கோல்தாம்சன்
நவ 10, 2024 05:44

அந்த காதலனை என்ன செய்தது கோர்ட்


J.V. Iyer
நவ 10, 2024 04:59

இதற்கு காரணமான கயவனை உடனே தூக்கில் இடவேண்டும். இந்த கயவனின் பெற்றோர்களையும் பிள்ளையை சரியாக வளர்க்காததால், பத்தாண்டுகாலம் சிறையில் இடவேண்டும். இதை எல்லாம் இவைய்ங்க செய்ய மாட்டாய்ங்க.


புதிய வீடியோ