உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாளிகைபுறத்தில் தேங்காய் உருட்ட கேரள உயர்நீதிமன்றம் தடை: தந்திரி வரவேற்பு

மாளிகைபுறத்தில் தேங்காய் உருட்ட கேரள உயர்நீதிமன்றம் தடை: தந்திரி வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: சபரிமலை மளிகைபுறத்தம்மன் கோயிலை சுற்றி பக்தர்கள் தேங்காய் உருட்டுவதற்கு கேரள உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இதை கண்டிப்பாக நிறைவேற்ற தேவசம்போர்டுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தந்திரி கண்டரரு ராஜீவரரு வரவேற்றுள்ளார்.சபரிமலை மாளிகைபுறத்து அம்மன் கோயிலை சுற்றி தேங்காய் உருட்டுவதை வழிபாடாக பக்தர்கள் நடத்தி வருகின்றனர். அது போல மஞ்சள் பொடியை கோயிலை சுற்றி தூவுவதும், தேவிக்கு கொண்டுவரும் பிளவுஸ் துணிகளை கோயில் கோபுரத்தில் தூக்கி வீசுவதும், அதை எடுக்க முண்டியடிப்பதும் போன்ற செயல்களில் பக்தர்கள் ஈடுபடுகின்றனர்.தேங்காய் காலில் இடிபடுவதுடன் தேங்காயில் மிதித்து கீழே விழுந்து பக்தர்கள் காயமடைகின்றனர். இப்படி ஒரு ஐதீகம் சபரிமலையில் இல்லை என தந்திரியும், மேல் சாந்தியும் தொடர்ந்து எடுத்துக்கூறியும் பக்தர்கள் செவிசாய்க்கவில்லை.இந்நிலையில் சபரிமலை விவகாரங்களை கவனிக்கும் சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், எஸ் முரளி கிருஷ்ணா ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: மளிகைபுறத்து அம்மன் கோயிலை சுற்றி தேங்காய் உருட்டுவதையும், கோயிலை சுற்றி மஞ்சள் பொடி தூவுவதையும் அனுமதிக்க முடியாது. இது பிற பக்தர்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட விஷயங்கள் சபரிமலையில் ஐதீகம் இல்லை என தந்திரி தெளிவுபடுத்தியுள்ளார்.கோயில் கோபுரத்தின் மீது பிளவுஸ் துணிகளை வீசக்கூடாது. இதை தேவசம்போர்டு கண்டிப்பாக நடைமுறைபடுத்த வேண்டும். பக்தர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவிப்பை தொடர்ந்து ஒலிபெருக்கியில் வெளியிட வேண்டும்.சபரிமலையில் 18ம் படி மற்றும் கோயில் சுற்றுப்புறங்களில் ஃப்ரீ லான்ஸர்கள் மற்றும் ஆன்லைன் சேனல் போட்டோகிராபர்கள், வீடியோ கிராபர்கள் ஒளிப்பதிவு செய்யக்கூடாது. தேவசம் போர்டின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே படம் எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.தேங்காய் உருட்டுவதற்கு தடை குறித்து தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியதாவது: சபரிமலையில் இப்படி ஒரு ஐதீகம் இல்லை. யாரோ ஒருவர் தொடங்கி வைத்து இவ்வளவு பெரிதாகி மற்ற பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் நடந்து வருகிறது. மஞ்சள் பொடியை வீசுவதும், பிளவுஸ் துணிகளை தூக்கி எறிவதும் தவறான செயல்கள். இதை நீதிமன்றம் தடை செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ram pollachi
நவ 29, 2024 16:58

உருட்டாதே...உருட்டாதே... மெதுவா கீழே வை.தேங்காயில் யாரோ பாம் வைத்து விட்டார்கள் என கவுண்டமணி சொல்லும் டயலாக் தான் நினைவிற்கு வருகிறது... கர்ப்ப கிரகத்தில் காசு எறிவது வழக்கத்தில் உள்ளதா தந்திரியாரே? மஞ்சள் கிருமிநாசினி அதற்கு தடா–வா? ஒரு கிலோ தேங்காய் விலை அறுபது.எண்ணெய் விலை இருநூறு தாண்டிவிட்டது. பானை கட்டினால் மரத்துக்கு வரி கிடைக்கும், உருட்டி விட்டால் கஜானா காலியாகிவிடும்.


அய்யப்பன்
நவ 29, 2024 10:46

தந்திரிகளுக்கு வருமானம் வந்துருது. மத்தவங்களுக்கு தேங்கா, மஞ்சப் பொடி, சரங்குத்தி சரம், வெடி வழிபாடு போன்றவற்றால்தான் வருமானம். அந்த தொழில் செய்தறவங்களையும் சபரிமலை தந்திரியாக்கிட்டா பிரச்சனை குறையும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 29, 2024 08:54

பம்பை நதியில் அழுக்கு ஆடையை அவிழ்த்து விடுவது, தென்னங்கன்று தூக்கிவந்து நடச் சொல்லி குடுப்பது, சரங்குத்தி யில் 3 தேங்காய் உடைப்பது, 18 படிகளில் ஏறும் முன் தேங்காய் உடைப்பது, இறங்கிய பின் தேங்காய் உடைப்பது, வாவர் சந்நிதியில், மாளிக்கப்புரத்து சந்நிதியில் மஞ்சள் பாக்கெட், தேங்காய் உருட்டு, இருமுடியில் கிலோ அரிசி, நெய் - இதெல்லாம் இங்கே கேரள மக்கள் யாரும் செய்ய மாட்டார்கள். 40 ஆண்டுகளாக இங்கே வசிப்பதாலும், அவர்களோடு 3 முறை சபரிமலை சென்று வந்ததாலும் சொல்கிறேன். இவ்வளவு ஏன்.. 48 நாள் விரதம், ஷேவ் செய்யாத மீசை தாடி முகங்கள் கூட கேரளாவில் அரிது. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் கூட மலைக்கு போவார்கள்.


அப்புசாமி
நவ 29, 2024 08:18

செம உருட்டல்.


Iniyan
நவ 29, 2024 07:49

அப்படியே வாவர் கோயிலில் பிற மத பூசாரி, அங்கே தர்கா வழிபாடு ஆகியவற்றையும் தடை செய்ய வேண்டும் வாவர்ருக்கும் அய்யப்பனுக்கு ஒரு தொடர்பும் இல்லை.


VSaminathan
நவ 29, 2024 06:41

ஐய்யோ சபரிமலையும் தேஸம் போர்டும் கோர்ட்டும் வெளி மாநிலத்தவர்களுக்கு மட்டுமே ஆணைகளை கிழிக்கும் மலையாளி செய்தானென்றால் வாய் மற்றும் கு-டியை இரண்டு கைகளால் பொத்திக் கொள்ளும்-முல்லக்கல் ப்ரான்கோ சூியநெல்லி கேஸ்களில் கேள நிதிபதிகளை பார்த்தோமே-மானங்கெட்ட இனம் மலையாளி-தனக்கொரு நீதியும் பிறர்க்கொரு நீதியும் பின்பற்றுவதில் மலையாளி நம்பர் ஒன் திருடன்.


Kasimani Baskaran
நவ 29, 2024 06:26

ஐயப்பனை தரிசிக்கச்செல்பவர்கள் பக்கவாட்டில் பக்தியை செலுத்துவது ஏற்புடையதல்ல. நீதிமன்றம் சொன்னது 200% சரியானது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை