உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டக்கல்லுாரி மாணவிக்கு தொந்தரவு கேரள உயர்நீதிமன்ற ஊழியர் கைது

சட்டக்கல்லுாரி மாணவிக்கு தொந்தரவு கேரள உயர்நீதிமன்ற ஊழியர் கைது

திருவனந்தபுரம்,:ஓடும் ரயிலில் சட்டக் கல்லூரி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கேரள உயர்நீதிமன்ற ஊழியரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 23 வயதான ஒரு மாணவி திருச்சூர் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். வார இறுதியில் ஊருக்கு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் இவர் வேணாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் திருவனந்தபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார். இரவு 9:00 மணியளவில் வர்கலாவை தாண்டி ரயில் வந்த போது மாணவியின் அருகில் இருந்தவர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். மாணவி உடனடியாக ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் திருவனந்தபுரம் வட்டியூர் காவு பகுதியைச் சேர்ந்த சதீஷ் 41, என்பதும், கேரள உயர்நீதிமன்றத்தில் பணிபுரிவதும் தெரிய வந்தது. அவர் மீது தம்பானூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ