உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை கோவிலில் அலங்காரத்துக்கு வாசமில்லா மலர்களை பயன்படுத்த கூடாது கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை கோவிலில் அலங்காரத்துக்கு வாசமில்லா மலர்களை பயன்படுத்த கூடாது கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை:'சபரிமலையில் அலங்காரத்துக்காக, வாசமில்லா மலர்களை பயன்படுத்தக்கூடாது' என, திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சபரிமலையில் மண்டல சீசன் நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை விவகாரங்களை கவனிக்கும், சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அணில் கே நரேந்திரன், முரளி கிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகள்:மண்டல பூஜை, மகர விளக்கு நாட்களில், சபரிமலை அய்யப்பன் கோவிலை அலங்கரிக்க வண்ணப் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும், ஆர்கிட் வகையைச் சார்ந்தவை. நீண்ட நேரம் வாடாமல் இருப்பதால், இந்த பூக்களை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற பூக்களை பயன்படுத்தக்கூடாது, ஐதீக முறைப்படியான பூக்கள் பயன்படுத்துவதை திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும்.அப்பம் மற்றும் அரவணை தரம் குறித்து கண்காணிக்க, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரி நியமிக்கப்படுகிறார். சபரிமலையில் மரக்கிளை உடைந்து விழுந்து, கர்நாடகாவை சேர்ந்த சஞ்சு என்ற பக்தர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கோட்டயம் அரசு மருத்துவ கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, கோட்டயம் மாவட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.பம்பை ஹில்டாப் பார்க்கிங்கில், பத்துக்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்களை ஒரே சமயத்தில் நிறுத்தக்கூடாது. இதை பத்தனம்திட்டை மாவட்ட போலீஸ் அதிகாரி உறுதி செய்ய வேண்டும். பக்தர்களின் கார்களை, 24 மணி நேரத்துக்கு அதிகமாக பார்க்கிங் செய்ய அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

18 படிகளில் நின்று போலீசார் 'போஸ்'

சபரிமலையில் கடந்த ஆண்டு போல நெரிசல் ஏற்படாமல் இருக்க, தேவசம் போர்டும், போலீசும் பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, 18 படிகளில் பக்தர்களை வேகமாக ஏற்றி விடுவதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக வந்த, 30 போலீசார் கடந்த 25-ம் தேதி பணி நிறைவு பெற்று ஊர் திரும்பினர். முன்னதாக தாங்கள் பணியாற்றிய, 18 படிகளில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இது நாளிதழ், தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. இது, சபரிமலை ஐதீகங்களுக்கு எதிரானது என்று பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தொடர்ந்து சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி பைஜுவிடம், சபரிமலை பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் அதிகாரியான கேரள போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் விளக்கம் கேட்டுள்ளார்.விளக்கம் கிடைத்த பின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இதற்கிடையில் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள உயர் நீதிமன்றம் சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில டி.ஜி.பி.,க்கும், உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு கமிஷனருக்கும் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை