உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து; 8 பேர் சீரியஸ்; 150 பேர் காயம்

கேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து; 8 பேர் சீரியஸ்; 150 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேளாவில், காசர்கோடு அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமுற்று 8 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். 150 பேர் பலத்த காயமுற்றனர்.கேரளாவில், காசர்கோடில் நீலேஸ்வரம் அருகே வீரர்காவு கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது. திருவிழாவில் வாணவேடிக்கை களியாட்டம் நிகழ்ச்சியின் போது, ஏராளமானோர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. திருவிழாவில் கூடியிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் தீயில் சிக்கி கொண்டனர். 150 பேர் பலத்த காயமுற்றனர். பலத்த காயம் அடைந்த, 8 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=14bederf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் காசர்கோடு மற்றும் மங்களூருவில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

jayvee
அக் 29, 2024 14:10

தீ சில நுண்ணிய நொடிகளில் பரவிய விதத்தை பார்த்தால் இதில் சதி வேலை இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது..


Kannan Chandran
அக் 29, 2024 10:00

காசர்கோடு , பாகிஸ்தானிய விசுவாசிகள் அதிகம் வசிக்கும் பகுதி. எனவே விரிவான விசாரணை நடத்தினால் மட்டுமே உன்மையான காரணம் தெரியவரும்


kantharvan
அக் 29, 2024 12:50

ஏண் கோமாளி அறிவை கொண்டு போயி கோவில் உண்டியலில் போட்டு விட்டு உண்டக்கட்டி சோறு தின்கிற நீங்க.. கொழுப்பெடுத்த தெரிஞ்சிட்டு அமைதியா தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறவங்கள தேவையே இல்லாம சொரண்டுறீங்க ...இதெல்லாம் ஒரு பொழைப்பா. உங்களாலதான் இந்து தர்மத்திற்கு கெட்ட பெயர்.


அப்பாவி
அக் 29, 2024 09:55

பட்டாசு வெடிக்கிறேன் பேர்வழின்னுட்டு ஊரையே கொளுத்துறாங்க.


RAMAKRISHNAN NATESAN
அக் 29, 2024 09:46

வீடியோவில் பார்த்தால் திடீரென பெட்ரோல் குண்டு வீசப்படுவது போல தீ பெரிய அளவில் பரவுகிறது .... நன்றியில்லாத ஒரு பிரிவினரைக் கொண்டாடும் மாநிலங்களில் அதுவும் ஒன்று .....


P. VENKATESH RAJA
அக் 29, 2024 08:47

காலையில் சோகமான செய்தி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்