உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒலிம்பிக் பதக்கம் வென்ற கேரளாவின் முதல் வீரர் காலமானார்

ஒலிம்பிக் பதக்கம் வென்ற கேரளாவின் முதல் வீரர் காலமானார்

கண்ணுார்: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பதக்கம் வென்ற கேரளாவைச் சேர்ந்த முதல் வீரரான மானுவல் பிரெட்ரிக், 78, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தைச் சேர்ந்த மானுவல் பிரெட்ரிக், 1972ல், ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், ஹாலந்தை இந்தியா வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற போது, கோல் கீப்பராக இருந்தார். இந்திய ஹாக்கி அணிக்காக, 1971 - 78 கால கட்டத்தில் விளையாடிய அவர், உலகின் சிறந்த கோல் கீப்பர்களில் ஒருவராக அறியப்பட்டார். 2019ல், மானுவல் பிரெட்ரிக்குக்கு, 'தியான் சந்த்' விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று, அவர் காலமானார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை