மேலும் செய்திகள்
தொழில்நுட்பக் கோளாறு: துபாய் கிளம்பிய விமானம் சென்னை திரும்பியது
3 hour(s) ago | 2
நக்சலிசத்தை ஒழிக்க உறுதியாக இருக்கிறோம்: அமித்ஷா திட்டவட்டம்
4 hour(s) ago | 9
ஹாசன் ஹாசனில் காட்டு யானை பிடிக்கும் பணிகள், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன. கும்கிகள் முகாம்களுக்கு திரும்பி அனுப்பப்பட்டு உள்ளன.ஹாசன் சக்லேஸ்பூர், ஆலுார், பேலுார் தாலுகாக்களில் கடந்த சில ஆண்டுகளாக, காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. காட்டு யானைகளை பிடிக்கும் பணி, கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் துவங்கியது. ஆனால் கடந்த மாதம் 4ம் தேதி, காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதலில், கும்கி யானை அர்ஜுனா இறந்ததால், காட்டு யானை பிடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.இந்நிலையில் பேலுாரில் காட்டு யானை தாக்கி, இந்த மாதம் 4ம் தேதி ஒருவர் இறந்தார். பெண் படுகாயம் அடைந்தார். இதனால் காட்டு யானை பிடிக்கும் பணிகள் மீண்டும் துவங்கின.அபிமன்யு என்ற கும்கி யானை தலைமையில், எட்டு கும்கிகள், காட்டு யானைகளை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த பணியின் போது, மூன்று காட்டு யானைகள் பிடிக்கப்பட்டன. மூன்று யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.இந்நிலையில் காட்டு யானைகள் பிடிக்கும் பணியை நேற்று முன்தினம், வனத்துறையினர் திடீரென நிறுத்தினர். கும்கிகளையும் முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'சில காட்டு யானைகளை பிடிப்பதில் அதிக சவால் உள்ளது. வனத்தில் சுற்றி திரியும் ஒரு சில காட்டு யானைகளுக்கு, மதம் பிடித்து உள்ளது. 'இச்சூழ்நிலையில், அந்த யானைகளை பிடிக்க சென்றால், கும்கிகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் தற்காலிகமாக, காட்டு யானை பிடிப்பதை நிறுத்தி உள்ளோம்' என்றனர்.காட்டு யானைகளுக்கு மதம் பிடித்து இருப்பதாக, வனத்துறையினர் கூறி இருப்பதால், அந்த யானைகள் ஊருக்கு வந்து விடுமோ என்று, கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
3 hour(s) ago | 2
4 hour(s) ago | 9