வீட்டுக்குள் புகுந்து 2 குழந்தைகள் கடத்தல்
பெலகாவி: பெலகாவி, அதானியில், ஹுலகபாள சாலையின் சுவாமி பிளாட்டில் வசிப்பவர் விஜய் தேசாய். இவருக்கு ஸ்ருஷ்டி, 4, என்ற மகளும், வியோம், 3, என்ற மகனும் உள்ளனர்.நேற்று மதியம் விஜய் தேசாய், பணி நிமித்தமாக பெலகாவி சென்றிருந்தார். அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தார். குழந்தைகளை விஜய் தேசாயின் தாயிடம் இருந்தன. காரில் வந்த இரண்டு மர்மநபர்கள், இவரது வீட்டுக்கு வந்து குடிக்க தண்ணீர் கேட்டனர். மூதாட்டி தண்ணீர் கொண்டு வர, உள்ளே சென்ற போது குழந்தைகளை கடத்தி கொண்டு தப்பியோடினர். இந்த காட்சி, வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.இது குறித்து, அதானி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து, பார்வையிட்டனர். குழந்தைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.காரில் வந்த மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து இரண்டு குழந்தைகளை கடத்தி சென்றனர்.