உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விலங்குகள் மீது கருணை: பிரதமர் மோடி வேண்டுகோள்

விலங்குகள் மீது கருணை: பிரதமர் மோடி வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' அனைவரும் விலங்குகள் மீது கருணையுடன் இருக்க வேண்டும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பிரதமர் மோடி, குஜராத்தில் பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று அவர் கிர் தேசிய வனவிலங்கு சரணாலயம் சென்று லயன் சவாரி பயணத்ததையும் மேற்கொண்டார்.இந்நிலையில் ஜாம் நகரில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு உள்ள 'வன்தாரா' விலங்குகள் நலவாழ்வு மையத்திற்கும் சென்று, அங்கு பராமரிக்கப்படும் விலங்குகளை பார்வையிட்டார். பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வன்தாராவில், ஆசிட் வீச்சால்பாதிக்கப்பட்ட யானையை பார்வையிட்டேன். அந்த யானைக்கு நல்லசிகிச்சை அளிக்கப்படுகிறது. வேட்டைக்காரர்களால், கண் பார்வை பறிபோன யானைகளும் அங்கு உள்ளன.டிரக் மோதியதில் காயமடைந்த யானையும் அங்கு உள்ளது. இது போன்ற விஷயங்கள், விலங்குகள் மீது எப்படி கொடூரமாகவும், கவனக்குறைவாகவும் இருக்க முடியும். இந்த பொறுப்பற்ற தன்மைக்கு முடிவு கட்டுவதுடன், அனைவரும் விலங்குகள் மீது கருணை காட்டுவோம்.அதேபோன்று, வாகனம் மோதியதில் படுகாயமடைந்த சிங்கத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தினரால் கைவிடப்பட்ட சிறுத்தை குட்டிக்கும், தகுந்த உணவுடன் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த பதிவுகளில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்புசாமி
மார் 05, 2025 09:49

ப்ரெட் குடுக்கலாம்.


Pandianpillai Pandi
மார் 05, 2025 09:08

ஆம் பொருப்பற்ற தன்மைக்கு முடிவு கட்ட வேண்டும். மக்கள் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே சாத்தியம். ஆனால் வாய் பேசமுடியாத விலங்குகளுக்கு ஆதங்கம் தெரிவிப்பவர்கள் மணிப்பூருக்கும் வந்தால் நல்லது பாராளுமன்றதில் கேள்வி கேட்டால் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பேசுபவர்கள் விலங்குகள் நலனை பற்றி சிந்திப்பது வியப்பை தருகிறது. எனினும் நல்ல சிந்தனைகளுக்கு மக்கள் செவி சாய்க்க வேண்டும்.


S.Martin Manoj
மார் 04, 2025 21:47

கலவரகாரர்களுக்கு கருணை உள்ளமா நடிக்காதிங்க சார்


Kumar
மார் 04, 2025 17:59

மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களிடம் கருணையுடன் நிதி குடுக்க வேண்டும்


vivek
மார் 04, 2025 18:15

திராவிட திருடர்களும், உன்னை போல் கொத்தடிமைகும் நிதி கிடையாது


N Sasikumar Yadhav
மார் 04, 2025 18:20

உங்கள மாதிரியான கோபாலபுர கொத்தடிமைகள் ஆட்டய போடுவதற்கா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை