உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நந்தினி இட்லி, தோசை மாவுக்கு டிமாண்ட் விஸ்தரிக்க கே.எம்.எப்., அதிகாரிகள் முடிவு

நந்தினி இட்லி, தோசை மாவுக்கு டிமாண்ட் விஸ்தரிக்க கே.எம்.எப்., அதிகாரிகள் முடிவு

பெங்களூரு: ஒரு வாரத்துக்கு முன்பு, அறிமுகம் செய்யப்பட்ட 'நந்தினி' இட்லி, தோசை மாவுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், 'நந்தினி' பெயரில் நெய், வெண்ணெய், பன்னீர், மைசூரு பாக், பால்கோவா, பேடா, லட்டு, சாக்லேட், குக்கீஸ், ஐஸ்கிரீம் உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்கிறது.அத்துடன் புதுப்புது பொருட்களை அறிமுகம் செய்வதிலும் கே.எம்.எப்., ஆர்வம் காட்டுகிறது.கடந்த வாரம் 'நந்தினி' இட்லி, தோசை மாவு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைக்கு பெங்களூரில் மட்டுமே சோதனை முறையில் இட்லி, தோசை மாவு விற்கப்படுகிறது.நந்தினி பால் பூத்களில் மாவு கிடைக்கிறது. தினமும் ஒரு டன் மாவு விற்பனை ஆகிறது. மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே பெங்களூரின் மற்ற பகுதிகளுக்கும் விஸ்தரிக்க, கே.எம்.எப்., திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, கே.எப்.எம்., உயர் அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரின் ஜெயநகர், பத்மநாப நகர், மல்லேஸ்வரம், சேஷாத்திரிபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளின் 'நந்தினி' பால் பூத்களில் இட்லி, தோசை மாவு கிடைக்கிறது. மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மற்ற பகுதிகளுக்கும் விஸ்தரிப்போம்.இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளை, பால் வேன்களில் அனுப்புவது இல்லை. இதற்காக தனி வாகனங்கள் செல்கின்றன. தற்போது ஐந்தாறு வாகனங்கள், மாவு பாக்கெட்களை சப்ளை செய்கின்றன. பெங்களூரின் மற்ற பகுதிகளுக்கு விற்பனை விஸ்தரிக்கப்பட்டால், 10 முதல் 12 வாகனங்கள் இயக்கப்படும்.பால் பூத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள், 'நந்தினி இட்லி, தோசை மாவு உள்ளதா' என, கேட்டு வாங்கிச் செல்வதாக டீலர்கள் கூறியுள்ளனர். ஒரு முறை வாங்கிச் சென்றவர்கள், மீண்டும் வந்து மாவு வாங்குகின்றனர். மாவு பாக்கெட்டுகள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ளும்படி, டீலர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம்.'நந்தினி' உற்பத்தி பொருட்களுக்கு, எப்போதும் டிமாண்ட் இருக்கும். இப்போது இட்லி, தோசை மாவுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ