உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் பயிற்சி மருத்துவரின் இறப்பு சான்றிதழ் கொடுக்காத கோல்கட்டா மாநகராட்சி: பாதிக்கப்பட்ட பெற்றோர் குற்றச்சாட்டு

பெண் பயிற்சி மருத்துவரின் இறப்பு சான்றிதழ் கொடுக்காத கோல்கட்டா மாநகராட்சி: பாதிக்கப்பட்ட பெற்றோர் குற்றச்சாட்டு

கோல்கட்டா: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி. கர் பயிற்சி மருத்துவரின் இறப்புச்சான்றிதழை இன்னும் வழங்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெற்றோர் குற்றம்சாட்டினர்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டியது.இந்த வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஜனவரி 20ல், ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்நிலையில் பனிஹாட்டி நகராட்சி தகனச் சான்றிதழை வழங்கிய போதிலும்,கோல்கட்டா மாநகராட்சி (கே.எம்.சி.) நிர்வாகத்திடம் இருந்து இறப்புச் சான்றிதழைப் பெற முடியவில்லை என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆர்.ஜி. கர் மருத்துவமனை அதிகாரிகள் இறப்புச் சான்றிதழை வழங்குவார்கள் என்று கே.எம்.சி., கூறியதாக பெற்றோர் தெரிவித்தனர். இருப்பினும், அதை வழங்குவதற்கு கே.எம்.சி தான் பொறுப்பு என்று மருத்துவமனை அதிகாரிகள் வாதிட்டனர்.இப்படி மாறி மாறி கூறுவதால், தங்களுக்கு இன்னும் மகள் இறப்புச் சான்று கிடைக்கவில்லை என்று பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
பிப் 23, 2025 22:09

மீண்டும் மமதாவின் தூக்கம் போச்சு.


Ramesh Sargam
பிப் 23, 2025 20:57

இந்த பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை