உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் டாக்டர் பிரச்னை அவ்வளவு தானா; முதல்வர் மம்தாவுக்கு வலுக்குது எதிர்ப்பு

பெண் டாக்டர் பிரச்னை அவ்வளவு தானா; முதல்வர் மம்தாவுக்கு வலுக்குது எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துர்கா பூஜை கொண்டாட்டங்களில் கவனம் செலுத்துமாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளது, பெரும் சர்ச்சையை தூண்டியுள்ளது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு இன்னும் அடங்கவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=spxdb53y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், மம்தா பானர்ஜி, பொதுமக்கள் தங்கள் கவனத்தை போராட்டங்களில் இருந்து துர்கா பூஜை விழாக்களுக்கு மாற்ற வேண்டும். சி.பி.ஐ., விசாரணையை விரைவில் முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியது விவாதத்தை கிளப்பி உள்ளது. இதற்கு, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் டாக்டர் தாயாரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்துள்ளது.

விளக்கு அணைந்து விட்டது!

'துர்கா பூஜை அல்லது வேறு எந்த பண்டிகையையும் நாங்கள் ஒருபோதும் கொண்டாட மாட்டோம். அவரது கருத்துகள் உணர்ச்சியற்றவை. அவர் எங்கள் மகளைத் திருப்பித் தரட்டும். அவர் குடும்பத்தில் இது நடந்திருந்தால் அவர் இதையே சொல்லியிருப்பாங்களா? என் வீட்டில் விளக்கு என்றென்றும் அணைந்து விட்டது. அவர்கள் என் மகளை தூக்கி எறிந்தார்கள். எனது மகளுக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் ஒடுக்க முயற்சிக்கின்றனர் என பயிற்சி பெண் டாக்டர் தாயார் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

இழப்பீடு

மேற்கு வங்க பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பொதுமக்களை உங்கள் கைப்பாவையாகக் கருதுகிறீர்களா? டாக்டரின் குடும்பத்திற்கு இழப்பீடு குறித்து மம்தா பொய் கூறுகிறார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

PerArivalan
செப் 10, 2024 20:20

அரக்கி ஆட்சி நடக்கிறது


Malayappa Venkatarama Seetaraman
செப் 10, 2024 20:16

அமைதி போயி போச்சு


rsudarsan lic
செப் 10, 2024 19:13

She can resign just after CBI submitted tge report and face yhf elections. Governor the Great can try his administrative skills


rsudarsan lic
செப் 10, 2024 19:10

பெண்ணை மதிக்க தெரியாத நீ ஓர் ஆணா? விட்டா மம்தா தான் கொலை செய்தார் என்று சொல்வீர போல ஆராயவும் ஆய்வும் இல்லா கமெண்ட்ஸ்


M Ramachandran
செப் 10, 2024 19:09

மக்களெ அதுவும் திருப்பூர் மற்றும் கோவை மக்களெ மிக உஷார். ஒரு வீண போனாவன் பொட்டா சமூகத்திலிருந்து பெண்களை வங்க தேசத்திலிருந்து சிஸ்டமேடிக்காக மம்தா தயவால் பாரதத்தில் ஊடுருவி பெயராய் ஹிந்து பெயராக ஆதார் கார்டில் மாற்றி ஊடுருவி பின்னலாடை நிறுவனர்களில் புகுந்து இந்தியாவிற்குள் ஊடுருவுமுன் தமிழ் மொழியையும் தீவிராவாத இயக்கம் கற்று அனுப்பி உள்ளத்தாக தகவல் . அவர்கள் ஹிந்துக்கள் பெயர் போர்வயில் நுழைந்துள்ளார். ஆண் மக்கள்ளை காவல் துறை கைய்யலியை ஆடையின்றி கழட்டி செக் செய்யணும். 3/4 ஆக இருந்து இந்து பெயரில் ஒளிந்திருந்தால் நொங்கு எடுக்கணும் இப்போது வந்திருக்கு இந்த செய்தி இதை அசாம் முதல்வர் உறுதி படுத்தி நம் தம் தமிழ் நாட்டு முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். UP. ரயில் கவிழ்ப்பு போல் இங்கு செய்ய உள்ளார்கள். திருப்பூரிலுள்ள கோவையிலுள்ள மக்களெ உஷார்.


sankaranarayanan
செப் 10, 2024 17:11

மம்தா பானர்ஜி, பொதுமக்கள் தங்கள் கவனத்தை போராட்டங்களில் இருந்து துர்கா பூஜை விழாக்களுக்கு மாற்ற வேண்டும் என்று திசை திருப்புவது சரி அல்ல இபோது பூஜை முக்கியமா அல்லது இறைந்தவரின் வழக்கு முக்கியமா மாநிலத்தின் மக்கள் போக்கை திசைதிகிருப்ப முயற்சிக்கிறார் மமதா


என்றும் இந்தியன்
செப் 10, 2024 16:39

திருட்டு திராவிட மாடல் உலகம் பூராவும் பரவியிருக்கின்றது என்று ஸ்டாலின் சொன்னது இது தான்


Barakat Ali
செப் 10, 2024 16:04

இதயமுள்ள இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு அடிப்படைச் சந்தேகம் "இவர் ஒரு பெண்ணா ?"


சமூக நல விரும்பி
செப் 10, 2024 15:49

மம்தா ஒரு சராசரி பெண்ணா. அவர் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதில் மக்களுக்கு பெரும் சந்தேகம் உள்ளது. இத்தனை அக்கிரமங்களும் களேபரம் நடந்தும் எப்படி அவர் மக்களை பார்த்து பண்டிகைகளை கொண்டாட சொல்கிறார். மகளை இழந்து தவிக்கும் ஒரு குடும்பம் எவ்வளவு சோகத்தை எதிர் கொண்டு இருக்கும். அவர்களுக்கு யாராலும் எந்த இழப்பீடும் வழங்க முடியாது. மம்தா முதல்வராக தொடர முடியாது. யேன் இன்னும் மத்திய அரசு மௌனம் சாதிக்கிறது. புரியாத புதிராக உள்ளது.மாநிலத்தில் அமைதி காக்க இருக்கும் மக்கள் ஓரளவு நிம்மதியுடன் வாழ் மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்


ஆரூர் ரங்
செப் 10, 2024 15:23

நீதிக்கும் தீதிக்கும் சம்பந்தமே இருந்ததில்லை. .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை