உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டா மருத்துவமனை சூறை: உயர் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

கோல்கட்டா மருத்துவமனை சூறை: உயர் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் கோல்கட்டா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.நாடெங்கும் எதிரொலிக்கும் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து, தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் சங்கத்தினர் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 14-ம் தேதியன்று பெண் டாக்டர் கொலையான ஆர்.ஜி. கர் மருத்துவமனை சூறையாடபட்டது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசை குறை கூறுவதால், முதல்வர் மம்தா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மம்தா அரசையும், காவல் துறையையும் கோல்கட்டா உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், மருத்துவமனை தாக்குதல் சம்பவத்தில் அலட்சியமாக இருந்த 2 துணை போலீஸ் கமிஷனர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட சில உயர் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஆக 21, 2024 05:50

தமிழகத்தைப்போலவே மேற்கு வங்கத்திலும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையிலேயே உள்ளது. அதை காரணம் காட்டி மம்தாவின் ஆட்சியை கலைப்பதுதான் ஞாயம்.


Vijayakumar Srinivasan
ஆக 21, 2024 00:10

கண்கெட்டபின்சூர்யநமஸ்காரம்..வேதனையாக உள்ளது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை