உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தலில் போட்டியிட கே.ஆர்.பி., திட்டம் எட்டு தொகுதிகளுக்கு ஜனார்த்தன ரெட்டி குறி

லோக்சபா தேர்தலில் போட்டியிட கே.ஆர்.பி., திட்டம் எட்டு தொகுதிகளுக்கு ஜனார்த்தன ரெட்டி குறி

கொப்பால்: வரும் லோக்சபா தேர்தலில், கே.ஆர்.பி., எனும் கல்யாண கர்நாடகா கட்சி எட்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.பா.ஜ.,வில் இருந்த ஜனார்த்தன ரெட்டி, அமைச்சராக பதவி வகித்தவர். கர்நாடகாவில் பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்தியதில் இவருக்கும் பங்குள்ளது. சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பான வழக்கில் கைதாகி, ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தார். உச்சநீதிமன்றத்தில் ஜாமின் பெற்று விடுதலையானார். வழக்கு விசாரணையில் உள்ளது. அவ்வப்போது விசாரணைக்கு ஆஜராகிறார்.கட்சியில் நீடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும், அவரை சேர்த்துக்கொள்ள பா.ஜ., மேலிடம் ஆர்வம் காண்பிக்கவில்லை. பொறுத்துப் பார்த்த ஜனார்த்தன ரெட்டி, வெறுப்படைந்து கே.ஆர்.பி., என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கினார். சட்டசபை தேர்தலில் 50 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கினார். கொப்பாலின், கங்காவதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியின் மற்ற வேட்பாளர்கள் தோற்றாலும், ஓரளவு ஓட்டுகளை பெற்றிருந்தனர்.லோக்சபா தேர்தலில், வெற்றி வாய்ப்புள்ள எட்டு தொகுதிகளில், வேட்பாளர்களை களமிறக்க ஜனார்த்தன ரெட்டி திட்டமிட்டுள்ளார்.இது தொடர்பாக, கே.ஆர்.பி., துணை தலைவர் மனோகர் கவுடா கூறியதாவது:வரும் லோக்சபா தேர்தலில், கொப்பால், சித்ரதுர்கா, பல்லாரி, ராய்ச்சூர், பீதர், பாகல்கோட், சிக்கபல்லாபூர், விஜயபுரா ஆகிய எட்டு தொகுதிகளில், கே.ஆர்.பி., போட்டியிடும். இந்த தொகுதிகளில் கட்சிக்கு சக்தி உள்ளது.பிப்ரவரி 4ல், கொப்பாலில் கட்சியின் அனைத்து தாலுகா பிரிவுகளின் தலைவர்கள் மாநாடு நடக்கவுள்ளது. அன்றைய தினம் லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்கள் பட்டியலை, கட்சியின் மாநில தலைவரும், கே.ஆர்.பி., எம்.எல்.ஏ.,வுமான ஜனார்த்தன ரெட்டி அறிவிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை