மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13
புதுடில்லி:மொபைல் போனை பறித்துச் சென்ற திருடனை விரட்டிச் சென்று பிடித்த பிளஸ்2 மாணவியை போலீசார் பாராட்டினர்.வடமேற்கு டில்லியின் கேசவ்புரத்தில் வசிக்கும் பிளஸ்2 மாணவி, நேற்று முன் தினம் மதியம் 3:45 மணிக்கு டியூஷனுக்கு, மொபைல் போனில் பேசியவாறே நடந்து சென்றார். பின்னால், பைக்கில் வந்த திருடன், மாணவியின் மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். ஆனால், மாணவி விடவில்லை. பைக்கை விரட்டிச் சென்றார். அதிர்ச்சி அடைந்த திருடன் பைக்கை தாறுமாறாக ஓட்டி சாலையில் கவிழ்ந்தான்.பொதுமக்கள் உதவியுடன் திருடனைப் பிடித்த மாணவி, போலீசுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் திருடனை கைது செய்தனர்.வழிப்பறித் திருடனை தைரியமாக விரட்டிச் சென்று பிடித்த மாணவியை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.
5 hour(s) ago | 5
6 hour(s) ago | 1
8 hour(s) ago | 13