மேலும் செய்திகள்
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
4 hour(s) ago | 3
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
7 hour(s) ago
நொய்டா:உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படைக்கு, 'சைபர் குற்ற சட்டம்' அமலாக்கத்தில் சிறந்த பணிக்கான விருது வழங்கப்பட்டது.இதுகுறித்து, எப்.சி.ஆர்.எப்., எனப்படும் எதிர்கால குற்ற ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி., ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:சைபர் குற்றங்களுக்கான சட்டங்களை அமலாக்குவதைக் கண்காணித்து போலீஸ் துறைக்கு விருது வழங்குகிறோம்.அந்த வகையில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை ஆகிய இரண்டுக்கும், சைபர் குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் முன்முயற்சியில் சிறந்து விளங்கியதற்காக, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.அதேபோல, உத்தர பிரதேச மாநிலத்தின் சிறப்பு அதிரடிப் படை சைபர் குற்றங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்குகிறது. சைபர் குற்ற சட்டங்களை மிகச்சிறப்பாக அமல்படுத்தியுள்ளது. எனவே, சைபர் சட்ட அமலாக்கத்தில் சிறந்து விளங்குவதற்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.சைபர் குற்றங்கள், தொழில்நுட்ப மோசடிகளை கண்டுபிடிப்பதில் உ.பி., படையினரின் இடைவிடாத முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.இந்தப் படையினர் குற்றக் கட்டுப்பாட்டுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. இணைய அச்சுறுத்தல்களை சமாளிக்க நுணுக்கமான அணுகுமுறையை கையாளுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சைபர் கிரைம், தடயவியல், விசாரணை, காவல் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு டில்லியில் கடந்த வாரம் நடந்த, 'பியூச்சர் க்ரைம் உச்சி மாநாடு - 2024'ல் விருதுகள் வழங்கப்பட்டன.
4 hour(s) ago | 3
7 hour(s) ago