உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கும்பமேளா கூட்டத்தால் 300 கி.மீ., துாரம்! போக்குவரத்து நெரிசல்

கும்பமேளா கூட்டத்தால் 300 கி.மீ., துாரம்! போக்குவரத்து நெரிசல்

பிரயாக்ராஜ் : பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில், 44 கோடி பேர் புனித நீராடியுள்ள நிலையில், மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், 300 கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ts3yhoj7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இங்குள்ள பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி, கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது; வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. இதுவரை, 44 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.மஹா கும்பமேளாவின் முக்கிய நாட்களில் ஒன்றான வசந்த பஞ்சமியை தொடர்ந்து, கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. வார விடுமுறை நாட்களில் புனித நீராடுவதற்காக, பிரயாக்ராஜ் நோக்கி மக்கள் வாகனங்களில் படையெடுத்தனர்.இதனால், பிரயாக்ராஜ் நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தின் ரேவாவின் சாக்கட்டில் துவங்கி, பிரயாக்ராஜ் வரையிலான 300 கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த 8ம் தேதி துவங்கி,நேற்று காலை வரை என, 48 மணி நேரம் மக்கள் நெடுஞ்சாலையிலேயே சிக்கித் தவித்தனர்.இதைத் தவிர, உத்தர பிரதேசத்தின் வாரணாசி, லக்னோ, கான்பூர் என பல நகரங்களில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த மார்க்கங்களில், 25 - 50 கி.மீ., துாரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.பிரயாக்ராஜிலும் 7 கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீசார் திணறினர்.'ஜபல்பூரில் இருந்து 15 கி.மீ., முன் இருக்கிறேன். பிரயாக்ராஜ் 400 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது' என, சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதுபோல பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது தொடர்பான படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டுள்ளனர். குளிக்க முடியாமல், சாப்பிட முடியாமல் சாலையிலேயே காத்திருப்பதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர். ரயில்கள் வாயிலாகவும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். கும்பமேளாவை ஒட்டி, அதன் அருகில் ஒன்பது ரயில் நிலையங்கள் வாயிலாக பக்தர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரயாக்ராஜ் சங்கமம் ரயில் நிலையத்துக்கு வெளியே மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதையடுத்து, இந்த ரயில் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த 9ம் தேதி துவங்கி, 14ம் தேதி இரவு வரை, இந்த ரயில் நிலையம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என, முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:சாலைகளில் மக்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான எந்த ஒரு வசதியையும் அரசு செய்யவில்லை. முதல்வரோ, துணை முதல்வர்களோ, அமைச்சர்களோ, இதைப் பற்றி கவலையும் படவில்லை.சாலைகளில் நிற்கும் மக்களின் மொபைல் போன் பேட்டரிகள் தீர்ந்து விட்டன. இதனால், குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கும்பமேளா காலத்திலாவது, சுங்க வரி கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புனித நீராடினார் ஜனாதிபதி!

மஹா கும்பமேளாவை ஒட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, திரிவேணி சங்கமத்தில் நேற்று புனித நீராடினார். முன்னதாக அவரை கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். படகில் சென்று, திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி புனித நீராடினார். அப்போது, கங்கை நதிக்கு தேங்காயை காணிக்கையாகச் செலுத்தி, சூரியக் கடவுளை வேண்டிக் கொண்டார்.இந்த பயணம் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளதாவது:அதிகளவு மக்கள் கூடுவது, நம் நாட்டின் அளப்பரிய கலாசார பாரம்பரியத்தின் பெருமையை காட்டுவதாக உள்ளது. ஒற்றுமை மற்றும் ஆன்மிகத்துடன் இணைந்த மனிதநேயம் ஆகிய செய்திகளை இது உலகுக்கு காட்டுவதாக உள்ளது. அனைவருக்கும் அமைதியும், வளமும் அளிக்கும்படி, தாய் கங்கையை வேண்டிக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ரயில் இன்ஜினில் ஏறிய பயணியர்பிரயாக்ராஜ் செல்வதற்காக கடந்த 8ம் தேதி அதிகாலை, வாரணாசி ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ரயில் நின்று கொண்டிருந்தது. அதில் இடம் பிடிப்பதற்காக நுாற்றுக்கணக்கான பயணியர் அடித்துப் பிடித்து ஓடினர். ஒரு சில நிமிடங்களிலேயே ரயிலின் அனைத்து பெட்டிகளும் நிரம்பி வழிந்தன. இடம் கிடைக்காத ஏராளமானோர் அங்கும், இங்கும் ஓடினர். சில பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர், ரயில் இன்ஜினில் ஏறினர். இன்ஜின் டிரைவர், இவர்களை தடுக்க முடியாமல் திகைத்தார். கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டதால், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், அவர்களை வெளியேற்ற முடியாமல் சிரமப்பட்டனர். ஒரு வழியாக கதவை திறந்த போலீசார், இன்ஜினில் ரயில் டிரைவர் பகுதியை ஆக்கிரமித்திருந்த அனைவரையும் வெளியேற்றினர். இதன்பின், அந்த ரயில் பிரயாக்ராஜ் புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 11, 2025 22:54

ஆற்றில் குளிப்பதில் என்னய்யா சனாதானம்? பாசி மணி விற்கும் பூனைக்கண் பெண் மாதிரி இன்னும் யாராவது இருக்காங்களான்னு பார்க்க இவ்வளவு கூட்டமா? இதுக்கு பேர் சனாதானமா, Asokan சார்?? காமெடியா இருக்கு. 44 கோடிப் பேர் இதுவரை பண்ணின எல்லா பாவங்களும் அழிக்கப்பட்டு புனிதர்கள் ஆகி விட்டார்களா??


அசோகன்
பிப் 11, 2025 15:53

5 லட்சம் பேர் மெரினாவுக்கு வந்ததிலேயே 10 பேரை கவுக்கொடுத்த நீங்க ளெல்லாம் பேச அருகதை இல்லை....... 46 கோடி மக்கள் பிரம்மிப்பாக உள்ளது...... இதுல .சனாதனத்தை டெங்கு மலேறியாபோல் அழிப்பானாம்.......இதை பாத்த பிறகு பாய்சன் குடிங்க


V வைகுண்டேஸ்வரன்
பிப் 11, 2025 18:55

எவனோ ஒரு சாமியாரைப் பார்க்க போயி 130 பேர் செத்த போது மூடிக்கிட்டு இருந்தவரெல்லாம், பேசப்படாது. மெரினாவில் ஏர் ஷோ நடத்தினது ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகம். அவங்க ஒரு செக்யூரிட்டி போடல, எந்த ஏற்பாடும் செய்யல. சில முட்டாள்கள் 7 மணிக்கே போயி வேகாத வெய்யிலில் நின்னுண்டு கத்தி தண்ணி இல்லாமல் மரணம் அடைந்தார்கள். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??. 2, 3 நாள் ரோடுலேயே கிடந்தது சனாதானமா??? 300 கி மீ தூரம் னா, கொச்சின் to சேலம் வரை. பைத்தியகாரத்தனம்.


vijayaraj
பிப் 11, 2025 11:50

நான் 12 நாட்கள் அங்கு இருந்தேன். வெளிநாட்டவர் அதிகம் பேர்கள் புனித நீராட வருகின்றனர். நம் நாட்டவரை மட்டும் கணக்கு கொள்ளவில்லை. வெளிநாட்டவரையும் சேர்த்து தான் 44 கோடி பேர் நீராடி உள்ளனர்.


Kasimani Baskaran
பிப் 11, 2025 08:38

இந்துக்களில் எழுச்சி என்றுதான் சொல்லவேண்டும்.


Palanisamy Sekar
பிப் 11, 2025 08:05

பக்தியின் வெளிப்பாடு இதுவே ஆகும். நொள்ளை சொல்கின்றவர்களுக்கு ஓட்டுக்கள் குறி. ஆனால் பக்தர்கள் இதனையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். சனாதனத்தை அழிக்க பேசிய மூளையற்ற முட்டா பீசுகள் இதனை பார்த்தேனும் வாய்துடுக்கை குறைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இதுதான் ஹிந்து தர்மம். இதுதான் இறை நம்பிக்கை. இதுவே புண்ணியம் என்று நம்பி முன்னூறு என்ன மூவாயிரம் கிலோ மீட்டரில் நின்றுகொண்டிருந்தாலும் அதுபற்றியெல்லாம் கவலையில்லை இந்த பக்தர்களுக்கு. நீலிக்கண்ணீர் நடிப்பவர்கள் பற்றியெல்லாம் கண்டுகொள்வதில்லை. இதனைக்கூட அரசியல் கலந்து பார்ப்போர் அறிவிலிகள். விமர்சனங்களில் அடாத சொற்களை சொல்லும் அந்த அறிவற்ற கும்பல்களை எந்த ஹிந்தும் புறந்தள்ளி போவார்கள். பாரதம் என்றைக்குமே புனித புண்ணிய பூமி என்பதை இந்த நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. இந்துமதம் இந்த புண்ணிய பூமியில் தோன்றிய புனித மதம். இந்துமதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட மதமல்ல, என்பதை இந்துமதத்தை விமர்சிப்போர் அறிந்துகொள்ளணும்.


Karthik
பிப் 11, 2025 10:05

மிகவும் சரியாக சொன்னீர்கள்..


J.V. Iyer
பிப் 11, 2025 04:45

இதையெல்லாம் எதிர்பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டாமோ? இந்த கும்பமேளாவை கெடுப்பதற்கென்றே பயங்கரவாதிகளும், தேசத்துரோகிகளும் இருப்பார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு யோகி சும்மா இருக்கலாமா?


Mediagoons
பிப் 11, 2025 00:39

இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிபேர் சென்று வந்துவிட்டார்களா?


guna
பிப் 11, 2025 08:24

உன் ஈன பிறப்பே எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது


Mediagoons
பிப் 11, 2025 00:39

எத்தனை லச்சம் பேர் அவதிப்பட்டாரகள் என்று யாரும் வெளியிடுவதில்லை . குறைந்தது கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள்


Mediagoons
பிப் 11, 2025 00:37

இதற்க்கு பெயர்தான் புனித பயணம் புனித நீராடலா ?


N Sasikumar Yadhav
பிப் 11, 2025 05:05

விழாக்காலங்களில் தமிழக மதுபிரியர்களால் திமுக தலைமையிலான தமிழக அரசின் சாராய ஆறுகளில் நீந்துவதுதான் புனிதநீராடல் தெரிந்து கொள்ளுங்கள்


S Ramkumar
பிப் 11, 2025 09:33

சொந்த பெயரில் எழுத வக்கு இல்லாதவர் எதற்கு அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கவேண்டும்.


N.Purushothaman
பிப் 11, 2025 15:03

இன்பநிதியோட கைக்கூலியா இருந்தால் எப்படி சொந்த பெயரில் கருத்து எழுத முடியும் ? புரிஞ்சிக்கோங்க பிலீஜ்...