உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பான் விபரமின்றி லட்சக்கணக்கில் டிபாசிட்: செந்தில் பாலாஜி வழக்கில் ஈ.டி., அதிர்ச்சி தகவல்

பான் விபரமின்றி லட்சக்கணக்கில் டிபாசிட்: செந்தில் பாலாஜி வழக்கில் ஈ.டி., அதிர்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் பான் விபரமின்றி லட்சக்கணக்கான ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது' என, அமலாக்கத் துறையினர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக 67 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைது செய்யப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6ypqjkvk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அவரது தரப்பில் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மறுப்பு

இதில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன் வழக்கை ஒத்திவைக்க அனுமதி கோரினார். இதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். அப்போது, செந்தில்பாலாஜி வீட்டில் இருந்து முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார். அவர் கூறியதாவது: செந்தில் பாலாஜி வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சில ஆவணங்கள், கண்டக்டர் வேலைக்காக, 14.2 கோடி ரூபாய் வரை வசூலித்ததை காட்டுகின்றன. ஒவ்வொரு பணியிடமும் விற்கப்பட்டுள்ளன. சில ஆவணங்களில் அமைச்சர் என்பதை, ஏ.ஆர்., என்றும், கண்டக்டர் என்பதை, சி.ஆர்., என்றும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர்.

நிறைய வித்தியாசம்

தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ள மொத்த விவசாய வருமானத்துக்கும், தற்போது அவர் வருமான வரித் துறையிடம் தெரிவித்த வருமானத்துக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. பான் எண், முகவரி உட்பட எந்த விபரமும் இன்றி லட்சக்கணக்கான ரூபாய், செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. வங்கி சலானிலும், எந்த விபரமும் இல்லை. கண்டக்டர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் வாரியத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டாலும், இது தொடர்பாக அவருக்கு முறையாக இ-மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ஆரூர் ரங்
ஆக 06, 2024 16:32

ஒரே நேரத்தில் ஒரு நபர் ஒரே வங்கிக் கிளையில் 50000 அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாயை செலுத்தினால் மட்டுமே பான் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம். ஆனால் தலா( சுமார்)49999 ரூ என பல கிளைகளில் செலுத்தினால் கேள்வி கேட்க முடியாது. இதுதான் நடந்திருக்கும்.


அப்பாவி
ஆக 06, 2024 16:19

பான் வுவரம் இல்லாம டெபாசிட் வாங்குன அல்லக்கை வங்கிகளை விசாரிக்க மாட்டாங்க.


Ramesh Sargam
ஆக 06, 2024 12:16

செந்தில் பாலாஜி போன்று மற்ற அமைச்சர்களையும் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால், தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவையான பணம் கிடைக்கும். வொவொரு தமிழ் குடிமகன் மீது இருக்கும் கடனும் இல்லாமல் போகும்.


Swaminathan L
ஆக 06, 2024 11:55

சட்டப்படி, குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்க அப் பணத்தைச் செலுத்துபவர் மற்றும் வங்கிக் கணக்கு சார்ந்த பான் எண்கள் கட்டாயம் சலானில் எழுதப்பட வேண்டும், வங்கி கணினி மென்பொருள் மூலம் வங்கிக் கணக்குப் பக்கத்தில் பதிவேற்றப்பட வேண்டும். இதைச் செய்யத் தவறிய, இத்தகவல்கள் இல்லாமலே சலான்களை பரிசீலித்து வங்கிக் கணக்குகளில் லட்சக்கணக்கான ரூபாய்களைச் சேமிக்க உதவிய வங்கி ஊழியர்கள் எந்த தேதிகளில் பணம் செலுத்தப்பட்டதோ அந்தத் தேதிகளில் அவ்வேலைகளில் ஈடுபட்டோர் மற்றும் மேலாளர்களையும் வழக்கில் சேர்த்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு சாமானியன், கல்வி அறிவு பெறாதவன் வங்கியில் பணம் எடுக்கவோ, கட்டவோ வந்தால் சலான்கள், கடிதங்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளும், அது சரியில்லை, இதை எழுதவில்லை என்று பாடாய்ப் படுத்தும் வங்கி ஊழியர்கள், பான் நம்பர் குறிப்புகள் இல்லாமல், லட்சக்கணக்கான ரூபாய்களை கணக்கில் போட "உதவியது" தண்டனைக்குரிய குற்றமே.


RAMAKRISHNAN NATESAN
ஆக 06, 2024 11:12

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து மத்திய மந்திரிசபையில் இடம் பெறலாம் என்று ஆ ராசா சொன்னாராமே ??


Sampath Kumar
ஆக 06, 2024 09:58

அட என்ன ஒரு கண்டுபிடுப்பு இதை சொல்ல 1 வருடமாக அலிபி உண்டாக்கிருக்கானுக போல பொங்கிட போய் என்னும் என்னைப் போய் எல்லாம் கண்டு பிடித்து சொல்லமுடியமோ பொய் சொல்லு உண்மை தான் ஜெயிக்கும்


RAMAKRISHNAN NATESAN
ஆக 06, 2024 09:30

கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திச் சுரண்டிக் கொழுப்பதில் திமுக நிபுணத்துவம் வாய்ந்தது .....


RAMAKRISHNAN NATESAN
ஆக 06, 2024 09:29

விஞ்ஞான ஊழலின் பிறப்பிடமாகிய திமுகவின் ஒரு அமைச்சர் இப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லையே... செய்ய முடிந்தாலும் அது NSDL ஐ கட்டுப்படுத்தும் நிதியமைச்சகத்தின் ஓட்டை அல்லவா ????


Prabhu P
ஆக 06, 2024 08:49

சூப்பர்


Sn RAAJA
ஆக 06, 2024 08:36

குற்றச்சாட்டு எல்லாமே சிறுபிள்ளை தனமா இருக்கு. பான் கார்டு இல்லாம பேங்ல ஐம்பதாயிரம் மேல செலுத்தவே முடியாது. செந்தில் பாலாஜி வாங்கன பணத்தை எப்பவோ திருப்பி குடுத்து செட்டில் ஆயிடுச்சி. செத்து போன கேஸை வெச்சிகிட்டு எவ்ளோ நாளைக்கு ஒப்பாரி வைக்க போரீங்க.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ