மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்: கவர்னர் துவக்கி வைப்பு
4 hour(s) ago
திருப்பட்டினம் கோவில் கும்பாபிேஷகம்; உள்ளூர் விடுமுறை
4 hour(s) ago
புதுச்சேரி போஸ்டர்
5 hour(s) ago
சாரல்
5 hour(s) ago
கடற்கரை துாய்மை படுத்தும் நிகழ்ச்சி
5 hour(s) ago
பெங்களூரு:''பெங்களூரு லால்பாக் பூங்காவை பாதுகாப்பதற்காக மக்கள் இயக்கத்தை துவக்குவேன்,'' என, பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறினார். கர்நாடக மாநிலம், பெங்களூரு சென்ட்ரல் சில்க் போர்டில் இருந்து, ஹெப்பால் வரை, 16.7 கி.மீ.,க்கு சுரங்கப்பாதை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை, லால்பாக் பூங்கா வழியாக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, பூங்காக்களில் 5 சதவீத இடத்தை, பொது பயன்பாட்டிற்கு உபயோகித்து கொள்ளும் வகையில், கர்நாடக அரசு பூங்காக்கள் பாதுகாப்பு திருத்த மசோதா, சட்டசபையில் சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்திற்கு, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். நேற்று லால்பாக் பூங்காவில் குடியிருப்பு சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் அவரும் பங்கேற்றார். இதில், குழந்தைகள், முதியவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், தேஜஸ்வி சூர்யா பேசியதாவது: லால்பாக் பூங்காவில் உள்ள பாறைகள் 3,000 ஆண்டுகள் பழமையானவை. இந்த பாறையை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. முட்டாள்தனமான சுரங்கப்பாதை திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க நிலையான பொது போக்குவரத்து திட்டத்தை கொண்டு வர வேண்டும். இப்போராட்டம் வெறும் ஆரம்பம் தான். இங்கு கூடியிருப்பவர்கள் எந்த கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல. சுரங்கப்பாதை திட்டம் கைவிடப்படா விட்டால் மக்கள் இயக்கத்தை துவங்குவேன். ரியல் எஸ்டேட் தொழிலுக்காக பூங்காக்களை பயன்படுத்தக்கூடாது. பெங்களூரில் உள்ள பூங்காக்கள் மக்களுக்கு சொந்தமானவை; அவற்றை நாங்கள் பாதுகாப்போம். இவ்வாறு அவர் பேசினார். ***
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago