உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லலித் மோடியின் ரூ.10.65 கோடி இழப்பீடு தொகை மனு:சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

லலித் மோடியின் ரூ.10.65 கோடி இழப்பீடு தொகை மனு:சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீது, அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்திற்கு இழப்பீடு கோரி, இந்தியன் பிரீமியர் லீக் முன்னாள் தலைவர் லலித் குமார் மோடி தாக்கல் செய்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று நிராகரித்தது.2009 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் போது நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக, அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் லலித் மோடிக்கு அமலாக்கத்துறை ரூ.10.65 கோடி அபராதம் விதித்தது. அதை தொடர்ந்து லலித் மோடி, பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இழப்பீடு கோரினார். இழப்பீடு தொகையான ரூ.10.65 கோடியை, பி.சி.சி.ஐ., ஈடுகட்ட வேண்டும் என்று லலித் மோடி மனுவில் கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ம மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று பட்டியலிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், லலித் மோடி, அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி சிவில் வழக்கைத் தொடரலாம். ஆனால் பி.சி.சி.ஐ., மீது எந்த கட்டாயமும் ஏற்படுத்த முடியாது. பி.சி.சி.ஐ.-க்கு எந்த கடமையும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி கோரிக்கை மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
ஜூன் 30, 2025 21:54

லலித் மோடி குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை. அவர் மீது போடப்பட்ட போலி கேஸ்களை களைந்து விரைவில் க்ளீன் சீட் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.


Rajan A
ஜூன் 30, 2025 18:39

பிசிசிஐக்கு சம்பாதிக்க கற்று கொடுத்தால் இது தான் நிலை


GMM
ஜூன் 30, 2025 18:20

2009 ஆண்டு வழக்கு. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீது, அந்நிய செலாவணி மேலாண்மைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விதித்த அபராதம் ரூ10.65 கோடி . ஆனால் காங்கிரஸ் கால மத்திய அமலாக்கத்துறை லலித் மோடிக்கு ரூ.10.65 கோடி அபராதம் விதித்தது. வழக்கு வாரியம் மீது. அபராதம் லலித் மோடி மீது. அமர்வு சிவில் வழக்கு போட சொல்கிறது. எப்ப முடியும்.? இறந்த பின் தான் முடியும்.


புதிய வீடியோ