உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்

லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 76, உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.இருதய நோயாளியான லாலு பிரசாத்துக்கு, வேறு சில உடல் உபாதைகளும் உள்ளன. இன்று அவரது உடல் நலம் மிகவும் மோசமானதை தொடர்ந்து, அவர் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை ஏற்ற இறக்கத்துடன் உள்ளன. எனினும் கவலைப்பட எதுவும் இல்லை என்று கட்சி தலைவர்களில் ஒருவரான பாய் விரேந்திரா தெரிவித்தார்.ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை இன்று இரவுக்குள் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்தாண்டு அவருக்கு மும்பை மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

MARUTHU PANDIAR
ஏப் 03, 2025 23:23

இவரால பீகார் எத்தனை ஆண்டுகள் கவலைக்கிடமாய் இருந்து நசிஞ்சே போச்சு தெரியுமா ?


MARUTHU PANDIAR
ஏப் 03, 2025 23:22

யாருக்கும் அஞ்சாதவர் .இந்தாளு தேர்தல் சமயத்தில் மண்டைய போட்டா ,அனுதாப ஓட்டுக்கள் இந்தாள் பெற்றடுத்த ரத்தினத்துக்கு கிடைக்கும்னு பேசிக்கறாங்க .


Kasimani Baskaran
ஏப் 03, 2025 04:04

கள்ளத்தனம் செய்து காலத்தை ஓட்டுவதில் நிபுணர்.. ஒருவேளை இப்படி பொய் சொல்லிவிட்டு ஏதாவது ஏமாற்று வேலை செய்யாமல் இருக்கவேண்டும்.


Sathya
ஏப் 02, 2025 23:32

Om Shanti


Dhanraj V.
ஏப் 02, 2025 23:15

இன்று வரை ரயில் கட்டணம் குறைவாக இருப்பதற்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் லாலு பிரசாத் யாதவ் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.


ஆரூர் ரங்
ஏப் 02, 2025 22:16

ரயில்வே லாபகரமாக இயங்கியது என்ற லாலு கூறியது பொய். பொய் கணக்குதான் காட்டினார் என அடுத்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நிரூபித்தாரே


தமிழ்வேள்
ஏப் 02, 2025 21:34

ரயில் தண்டவாளத்தின் தரத்தை குறைத்தது, அதிக பாரம் ஏற்ற குட்ஸ் வேன்களில் அடிஷனல் ஸ்பிரிங் இணைத்து தண்டவாளத்தின் தேய்மானம் அதிகரித்து போன்றவை மட்டுமே இவரது சாதனைகள்..இவரது காலத்தில் இருந்தே ரெயில் ஃபிராக்சர் என்னும் விரிசல் பிரச்சினை அதிகம் ஏற்பட்டது....இவர் லாபம் காட்டியதை ஃபிராடு தனம்.


தமிழன்
ஏப் 02, 2025 20:55

செய்த கர்மபலன் பல தலைமுறையை தாக்கும் உதாரணம் இந்தாளுதான்


Kacha Theevai Meetpom
ஏப் 02, 2025 20:52

டில்லியில் சில ஏக்கர் தேட வேண்டியிருக்குமே ..


Rathnam Mm
ஏப் 02, 2025 20:39

People will remember the train Grib Rath are in the track one draw back no pantry service in all trains.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை