உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நில அபகரிப்பு வழக்கு; அழகிரியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நில அபகரிப்பு வழக்கு; அழகிரியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நில அபகரிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் கோவிலுக்குச் சொந்தமான 44 சென்ட் இடத்தை அபகரித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி (கருணாநிதி மகன்) உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரியும் முக அழகிரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ஏன் எதிர்கொள்ளக் கூடாது என்று அழகிரி தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சரியான கருத்தை தான் பிறப்பித்துள்ளது. எனவே, வழக்கை நீங்கள் அங்கே சந்திக்குமாறு கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

duruvasar
டிச 08, 2025 14:39

தீர்ப்பு வழங்கிய நீதியரசரின் குலம், கோத்திரம், பரம்பரை விவரங்களை உடன்பிறப்புகள், குருமா, சண்முகம் போன்றோர் விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டுவருவாரகள் என எதிர்பார்க்கலாம்.


Venkataraman Subramania
டிச 08, 2025 14:39

All politician should face the cases which are / were booked against them. Asking relief, relieving from the cases should not be entertained. Also, once case filed, the politician who is elected member should be removed from such position irrespective of quantum of punishment / bail / to be heard by Any Court. Then only tem will work properly. Also, person / candidate who stood second in the election result should be appointed as elected member for that contituency. Jai Hind Bharat Mata Hi Jai


ராமகிருஷ்ணன்
டிச 08, 2025 14:35

களவாணிதனம் செய்து வரும் கும்பல் நீதிமன்றத்தை ஏன் சந்திக்க பயப்படுகிறார்கள்.


Shanmuga Sundaram
டிச 08, 2025 14:34

most welcome


karthik
டிச 08, 2025 14:32

இந்த ஒரு குடும்பத்தால் தமிழ் நாடு எவ்வளவு இழந்திருக்கிறது என்பதை கணக்கெடுக்கவே முடியாது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ