உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேதர்நாத்தில் நிலச்சரிவு: 3 பக்தர்கள் பலி, 8 பேர் காயம்

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 3 பக்தர்கள் பலி, 8 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கேதர்நாத்: உத்தரகண்ட்டில் உள்ள கேதர்நாத் கோயிலுக்கு செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர்.உத்தரகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கேதர்நாத் கோயிலுக்கு செல்லும் வழியில் கவுரிகுண்ட் மற்றும் சிர்பஸா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், கோயிலுக்கு சென்ற பக்தர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். 3வது நபர் ருத்ரபிரயாக் மாவட்டத்தை சேர்ந்தவர். 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Swaminathan L
ஜூலை 21, 2024 14:43

உத்தரகாண்ட் சார் தாம் பகுதிகள் ஜியாலாகலி மிகவும் ஸென்ஸிடிவானவை. வாகனங்கள் வேகம் காரணமாக ஏற்படும் அதிர்வு, சப்தம் காரணமாக ஏற்படும் எதிரொலி போன்ற காரணங்களால் சட்சட்டென்று நிலச்சரிவுகள் சிறிதும் பெரிதுமாய் நடக்கின்றன. ஒரு பக்கம் கிடு கிடு பள்ளம், இன்னொரு பக்கம் லூசான மண்ணால் பொதியப் பெற்றுள்ள மலைப் பரப்பு.. ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவர்கள் செல்லும் வாகனங்கள்.. தேவ பூமி ரண களமாகிறது அடிக்கடி.


ஆனந்த்
ஜூலை 21, 2024 12:54

சிவனடி சேர்ந்த பக்தர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ