உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்

சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சாட்டன்: சிக்கிம் ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 வீரர்களை காணவில்லை. அவர்களை தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களாக வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ewyoo9p4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், வடக்கு சிக்கிமில் உள்ள சாட்டன் எனும் பகுதியில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. நேற்று மாலை அங்கு பெய்த கனமழை காரணமாக, பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில், சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 ராணுவ வீரர்களை காணவில்லை. அவர்களை தேடி வருகின்றனர்.இது குறித்து ராணுவம் தரப்பில் கூறியதாவது; இதுவரையில் நிலச்சரிவில் சிக்கிய 3 ராணுவ வீரர்களின் உடல் எடுக்கப்பட்டுள்ளது. சிறு காயங்களுடன் 4 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சாவாலான வானிலையிலும், மாயமான 6 ராணுவ வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M. PALANIAPPAN, KERALA
ஜூன் 02, 2025 14:53

இரவு, பகல், மழை, வெய்யில் பார்க்காமல் நாட்டிற்க்காக பாடு படும் இராணுவ வீரர்களுக்கு நன்றி பலியான 3 இராணுவ வீரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல், அவர்களது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்