உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்தவருக்கு அரசு வேலை: பணியில் சேர்ந்த ஸ்ருதி மகிழ்ச்சி

நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்தவருக்கு அரசு வேலை: பணியில் சேர்ந்த ஸ்ருதி மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு:நிலச்சரிவில் சிக்கி குடும்பத்தையும், சாலை விபத்தில் வருங்கால கணவரையும் இழந்த கேரள பெண் ஸ்ருதி இன்று அரசு பணியில் சேர்ந்தார்.கடந்த ஜூலை மாதம் நடந்த வயநாடு நிலச்சரிவில், மெப்பாடி பஞ்சாயத்தில் உள்ள சூரல்மலா மற்றும் முண்டக்கை கிராமங்கள் புதையுண்டன. ஸ்ருதி குடும்பத்தினர் 9 பேரில் அவரை தவிர அனைவரும் மண்ணில் புதைந்தனர். நிலச்சரிவில் ரூ. 4 லட்சம் ரொக்க பணமும் 15 சவரன் நகைகளும், புதிதாக கட்டிய வீடும் அடித்து செல்லப்பட்டது.அவருக்கு ஒரே ஆறுதலாக, திருமணம் நிச்சயக்கப்பட்ட காதலன் மட்டுமே இருந்தார். குடும்பத்தினர் இல்லாத நிலையில், திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஜூன் 2 அன்று ஸ்ருதியுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. அந்த துயரமான காலங்களில் காதலர் ஜென்சன் மட்டுமே ஸ்ருதிக்கு ஆதரவாக இருந்தார்.ஆனால் துரதிஷ்டவசமாக, திருமணத்துக்கு சில நாட்கள் முன்னதாகஅவரும் சாலை விபத்தில் உயிரிழந்தார்.இதனால், ஆதரவுக்கு யாரும் இன்றி ஸ்ருதி நிர்க்கதியாக நின்றார்.இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு நிவாரணங்கள் வழங்கியது. அப்போது தனது குடும்பத்தையும், வருங்கால கணவரையும் இழந்து தவித்த ஸ்ருதியின் நிலை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு அரசு வேலை வழங்க முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்தார்.அதன்படி, அவருக்கு வருவாய் துறையில் கிளார்க் பணி வழங்கப்பட்டது. ஸ்ருதி பணியில் இன்று சேர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்.கிளார்க் பணியில் சேர்ந்த ஸ்ருதி கூறியதாவது:எனது குடும்பத்தையும், கணவரையும் இழந்து தவித்து வந்த நிலையில், அரசும், ஆதரவாக இருந்த அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது. ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.எனது கணவர் ஜென்சன் உடன் சென்றபோது ஏற்பட்ட சாலைவிபத்தில் எனது உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் நான் எனது பணியை தொடர்ந்து திறம்பட செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு ஸ்ருதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

rama adhavan
டிச 09, 2024 23:40

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி, வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. ??


Barakat Ali
டிச 09, 2024 22:27

இவர் ஒருவர்தான் பரிதாபமாக பாதிக்கப்பட்டாரா ??


V RAMASWAMY
டிச 09, 2024 21:56

ஏற்கனவேயே அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலை இல்லாமல் நாற்காலிகளை தேய்த்து ஜாலியாக பென்ஷன் போல் சம்பளம் வாங்குகிறார்கள், கொஞ்சம் வேலை இருந்தால், லஞ்சம் கொடுத்தால் செய்வார்கள். இந்த நிலையில் எதற்கெடுத்தாலும் துயர் வந்தவர்களுக்கெல்லாம் அரசு பணி என்றால், பலவிதமான துயர்களில் தவிக்கும் 75 சதவிகித தமிழக மக்களுக்கும் அரசு பணி கொடுக்கவேண்டும். இது தவிர, விபத்தில் இறந்தாலோ அல்லது வேறு இயற்கை சீற்றத்தால் உயிர் இருந்தாலோ, சகட்டு மேனிக்கு ஒரு வரையறை இல்லாமல் நிவாரணமாக லட்சக்கணக்கில் உதவித்தொகை. இது அவர்களுக்கு போய்ச்சேருகிறதோ இல்லையோ என்ற விஷயம் வேறு. மொத்தத்தில், அரசு கஜானவை காலி செய்வதில் நிபுணத்துவத்தை காண்பித்துவிட்டு, கஜானா காலி, அரசிடம் பணம் இல்லை என்று ஒப்பாரி, பிறகு ஒன்றிய அரசு காசு கொடுப்பதில்லை என்று மேடைக்கு மேடை மூளைச்சவலை பேச்சு. ம், என் செய்வது மக்களே, யோசனையே செய்யமாட்டீர்களா அல்லது யோசனை செய்ய தெரியவில்லையா?


Anantharaman Srinivasan
டிச 09, 2024 22:50

அரசே இந்த V.Ramaswamy எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்து ஒரு அரசு வேலை போட்டு கொடு. அரசு உத்தியோகம் கிடைக்காத புலம்பல் தாங்கல.


SANKAR
டிச 10, 2024 00:45

are you a human ? she lost eight of her family house and jewels and would be.


SUBBU,MADURAI
டிச 10, 2024 13:16

ஐயா உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதா? அந்தப் பெண்ணின் நிலைமையை யோசித்துப் பாருங்கள் மற்றவர்களோடு இந்தப் பெண்ணை ஒப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்? தயவுசெய்து செய்தியை மீண்டும் நன்றாக படித்துப் பாருங்கள் அந்தப் பெண்ணின் வலி என்ன என்பது புரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை